Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸி.க்கு இலக்கு 413! 3ம் நாள் முடிவில் 65/2

Webdunia
வெள்ளி, 18 ஜனவரி 2008 (17:01 IST)
பெர்த் டெஸ்ட் 3ம் நாள் ஆட்டத்திலும் இந்தியாவின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது. தனது 2வது இன்னிங்சில் 294 ரன்களை எடுத்த இந்திய அணி ஆஸ்ட்ரேலியாவிற்கு 413 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது. ஆனால் ஆஸ்ட்ரேலிய துவக்க ஆட்டக்காரர்களான பில் ஜாக், கிறிஸ் ரோஜர்ஸ் ஆகிய இருவரும் பத்தான் பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர்.

இந்திய அணியில் இர்பான் பத்தான் சிறபாக அடி 46 ரன்களை எடுத்தார். லக்ஷ்மண் இன்று முக்கியமான ஒரு இன்னிங்சை ஆடினார். 79 ரன்களை எடுத்த லக்ஷ்மண் ஆர்.பி.சிக்குடன் இணைந்து 51 ரன்களைச் சேர்த்ததன் மூலம் 400 ரன்களுக்கும் மேலாக முன்னிலைப் பெறச்செய்தார்.

முன்னதாக தோனியும் லக்ஷ்மணும் இணைந்து 75 ரன்களை 7வது விக்கெட்டுக்காக சேர்த்தனர். தோனி எடுத்த 38 ரன்களில் 2 பவுண்டரிகளும், 2 மிகப்பெரிய சிக்சர்களும் அடங்கும்.

ஆர்.பி.சிங் அபாரமாக துவங்கினார். சைமன்ட்சின் பந்து ஒன்றை சிக்சருக்கு அடித்தார். அதன் பிறகு லக்ஷ்மணுக்கு உறுதுணையாக விளையாடி 3 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கடைசியில் ஸ்டூவர்ட் கிளார்க்கின் அபாரமான பந்திற்கு ஆட்டமிழந்தார். லக்ஷ்மணும் கடைசியில் ரன்களை விரைவில் சேர்க்கும் உத்தியுடன் அடிக்க முயன்ற போது 79 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தியா 294 ரன்கள்.

ஸ்டூவர்ட் கிளார்க் 4 விக்கெட்டுகளையும், பிரட் லீ 3 விக்கெட்டுகளையும், சைமன்ட்ஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஷான் டெய்ட் இந்த டெஸ்ட் போட்டியில் விக்கெட்டை கைப்பற்றவில்லை. அவர் மொத்தம் 21 ஓவர்கள் வீசி 92 ரன்களை விட்டுக் கொடுத்து விக்கெட் எதையும் கைப்பற்றவில்லை.

ஆஸ்ட்ரேலிய அணி மிகப்பெரிய இலக்கை எதிர்கொண்டு களமிறங்கியது. ஆனால் பத்தானின் இரண்டு அருமையான பந்துகளுக்கு முதலில் கிறிஸ் ரோஜர்ஸ் (15) பிறகு பில் ஜாக்(16) ஆகியோர் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.

ஆட்ட நேர இறுதியில் ரிக்கி பாண்டிங் 24 ரன்களுடனும், மைக் ஹஸ்ஸி 5 ரன்களுடனும் உள்ளனர். ஆஸ்ட்ரேலியா 2 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள்.

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

Show comments