Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆஷஸ் தொடருக்குப் பின் ஹார்மீசன் ஓய்வு?

ஆஷஸ் தொடருக்குப் பின் ஹார்மீசன் ஓய்வு?
லண்டன் , ஞாயிறு, 26 ஜூலை 2009 (15:44 IST)
ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக நடந்து வரும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்குப் பின்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஹார்மீசன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'தி லண்டன் மிரர்' நாளிதழில் வெளியாகியுள்ள செய்தியில், இங்கிலாந்து வீரர் ஆண்ட்ரூ பிளிண்டாஃப் போல் ஆஷஸ் தொடர் நிறைவடையும் போது ஹார்மீசன் தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவார் எனக் கூறப்பட்டுள்ளது.

தற்போது 30 வயதாகும் ஹார்மீசன், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கடந்த 2007இல் ஓய்வு பெற்றது நினைவில் கொள்ளத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil