Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆம்லா, காலீஸ் அவுட்; தென் ஆப்பிரிக்கா 20/2

Webdunia
வியாழன், 24 பிப்ரவரி 2011 (19:10 IST)
டெல்லியில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 223 ரன்கள் மேற்கிந்திய அணியின் இலக்கை எதிர்த்து தென் ஆப்பிரிக்கா ஆம்லா, காலிஸ் விக்கெட்டுகளை இழந்து 20 ரன்கள் எடுத்துள்ளது.

ஆட்டம் விறுவிறுப்படையத் தொடங்கியுள்ளது. ஹஷிம் ஆம்லா 2 பவுண்டரிகளுடன் 14 ரன்கள் எடுத்து ஆடி வந்தபோது கேமர் ரோச் என்ற வேகப்பந்து வீச்சாளரின் அபாயமான இன்ஸ்விங்கருக்கு விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இன் கட் ஆன பந்து ஆம்லாவின் உடலைத் தாக்குவது போல் சென்றது, போகிற வழியில் மட்டையின் உள்விளிம்பைத் தொட்டுச் செல்ல அதனை விக்கெட் கீப்பர் தாமஸ் அபாரமாக டைவ் அடித்து நல்ல கேட்ச் ஒன்றைப் பிடித்தார்.

சற்று முன் முக்கிய வீரரான ஜாக் காலிஸ், இடது கை சுழற்பந்து வீச்சாளர் சுலைமான் பென் பந்தை தப்பாக டிரைவ் ஆட முயன்று எட்ஜ் செய்தார் அதனை கேப்டன் சம்மி ஸ்லிப் திசையில் பிடித்தார். பந்து தரையில் பட்டது போல் தெரிந்தாலும் 3-வது நடுவர் அழைக்கப்படவில்லை.

தற்போது ஸ்மித் 6 ரன்களுடனும், டீவிலியர்ஸ் ரன் எதுவும் எடுக்காமலும் விளையாடி வருகின்றனர்.

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

Show comments