Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆசிய கோப்பை யாரு‌க்கு? பா‌கி‌ஸ்தா‌ன் - வங்கதேசம் இன்று மோதல்

ஆசிய கோப்பை யாரு‌க்கு? பா‌கி‌ஸ்தா‌ன் - வங்கதேசம் இன்று மோதல்
, வியாழன், 22 மார்ச் 2012 (11:48 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. கோ‌ப்பையை வெ‌ன்று வ‌ங்கதேச அ‌ணி வரலா‌ற்று சாதனை படை‌க்குமா எ‌ன்று அ‌ந்நா‌ட்டு ரச‌ிக‌ர்க‌ள் ஏ‌க்க‌த்துட‌ன் கா‌த்‌திரு‌க்‌கி‌ன்றன‌ர்.

ஆசிய கிரிக்கெட்டில் வங்கதேச அணி இறுதி சுற்றுக்குள் நுழைந்திருப்பது இதுவே முதல் முறையாகும். மேலும் 2-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்ட தொடரில் வங்கதேச அணி இறுதி சுற்றை எட்டியிருப்பது இது 2-வது முறை.

இதற்கு முன்பு 2009-ம் ஆண்டு நடந்த முத்தரப்பு இறுதி சுற்றில் இலங்கையிடம் தோல்வி கண்டிருந்தது. எனவே ஆசிய கோப்பையை வென்றால் அது அந்த அணிக்கு புதிய வரலாற்று சாதனையாக இருக்கும்.

ஆனால் அவர்களின் கனவு நனவாவது அவ்வளவு எளிதல்ல. மிஸ்பா உல் ஹக் தலைமையிலான பாகிஸ்தான் அணி பலம் வாய்ந்தது. ஏற்கனவே லீக்கில் 21 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை தோற்கடித்து இருக்கிறது. இருப்பினும் வங்கதேசத்தை அந்த அணி இனி மிகுந்த எச்சரிக்கையுடனும், கவனமுடனும் எதிர்கொள்ளும்.

வங்கதேச அணியை பொறுத்தவரை தொடர்ந்து 3 அரைசதங்கள் விளாசிய தமிம் இக்பால், ஆல் ரவுண்டர்க‌ள் ஷகிப் அல் ஹசன், நசிர் ஹூசைன் ஆகியோரைத் தான் சார்ந்திருக்கிறது. இவர்கள் மீண்டும் ஒரு முறை மிரட்டும் பட்சத்தில் பாகிஸ்தானின் 2-வது ஆசிய கோப்பை கனவு நிறைவேறுவது சிக்கலாகி விடும்.

பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் முகமது ஹபீசும், நசிர் ஜம்ஷெட்டும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இருவரும் சதம் அடித்தும் பலன் இல்லாமல் போய் விட்டது. அந்த அணி, பீல்டிங்கில் மேலும் முன்னேற்றம் காண்பது அவசியம்.

இதே போல் அப்ரிடி பேட்டிங்கில் சொதப்பி வருவதும் கவலைக்குரிய அம்சமாகும். மற்றபடி பந்து வீச்சில் பாகிஸ்தான் மிரட்டக்கூடும். எப்படியும் சொந்த மண்ணில் வங்காளதேசத்திடம் இருந்து 2000-ம் ஆண்டு சாம்பியனான பாகிஸ்தான் பலமான சவாலை இந்த முறை சந்திக்க வேண்டி வரும்.

பாகிஸ்தான் - வங்கதேச அணிகள் இதுவரை 30 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்து உள்ளன. அதில் 1999-ம் ஆண்டு உலக கோப்பையில் நடந்த ஒரே ஒரு லீக்கில் மட்டும் வங்கதேசம் பாகிஸ்தானை வென்றிருக்கிறது. மற்ற 29 மோதல்களிலும் பாகிஸ்தான் வசமே வெற்றி சென்றிருக்கிறது.

பாகிஸ்தான் ‌வீர‌ர்க‌ள்: மிஸ்பா உல்-ஹக் (தலைவ‌ர்), முகமது ஹபீஸ், நசிம் ஜம்ஷெட், ïனிஸ்கான், உமர்அக்மல், அப்ரிடி, ஹம்மத் அசாம், சர்ப்ராஸ் அகமது அல்லது வஹாப் ரியாஸ், உமர்குல், சயீத் அஜ்மல், அய்சாஸ் சீமா.

வங்கதேச ‌வீர‌ர்க‌ள்: முஷ்பிகிர் ரகிம் (தலைவ‌ர்), தமிம் இக்பால், நசிமுத்தின், ஜஹூருல் இஸ்லாம், ஷகிப் அல் ஹசன், நசிர் ஹூசைன், மக்முதுல்லா, மோர்தாசா, அப்துர் ரசாக், ஷகதத் ஹூசைன், நஸ்முல் ஹூசைன்.

இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்ஷன் மற்றும் நியோ கிரிக்கெட் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil