Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆக்லாந்து டெஸ்டில் திடீர் திருப்பம்! இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு!

ஆக்லாந்து டெஸ்டில் திடீர் திருப்பம்! இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு!
, சனி, 8 பிப்ரவரி 2014 (13:21 IST)
ஆக்லாந்து டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாளான இன்று எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. முதல் இன்னிங்சில் இந்தியா 202 ரன்களுக்கு சுருண்டு போக 301 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த நியூசீலாந்து பாலோ ஆன் கொடுத்து இந்தியாவை நசுக்காமல் தாங்களே மீண்டும் விளையாடக் களமிறங்கி 105 ரன்களுக்குச் சுருண்டனர்.
FILE

தோனியின் பீல்டிங் உத்தி இந்த முறை சிறப்பாக அமைந்தது. பந்து வீச்சில் தீவிரம் கூடியிருந்தது. இதனால் உணவு இடைவேளையின் போதே நியூசீலாந்து 15/4 ஆனது. முதல் இன்னிங்ஸில் கேன் வில்லியம்சிற்கு கேட்ச் விட்ட முரளி விஜய் இந்த இன்னிங்ஸில் மெக்கல்லமிற்கு கேட்ச் விட்டார். ஆனால் ஜடேஜா அபாரமான பீல்டிங் மற்றும் த்ரோவில் அவரை ரன் அவுட் செய்தது திருப்பு முனையாகும்.
webdunia
FILE

முதல் ஓவரே ருதர்போர்டை எல்.பி. செய்தார் ஷமி. 3வது ஓவரில் புல்டனை டிரைவ் ஆட வைத்து ஜடேஜா அதனை ஷார்ப்பாக கேட்ச் எடுத்தார்.
webdunia
FILE

கேன் வில்லியம்சன் ஜாகீர் பந்தை ஷாட் மிட்விக்கெட்டில் காற்றில் ஆட பந்து தரையைத் தொட இருந்த போது ஒரு கை டைவ் அடித்து கேட்ச் செய்தது. அது மீண்டும் ஜடேஜா. இப்படி ஜடேஜா மயம், கடைசியில் அபாய சவுதீ விக்கெட்டையும் வீழ்த்தினார் ஜடேஜா.

கோரி ஆண்டர்சனை மொகமட் ஷமி அபாரமாக ரவுண்ட் த விக்கெட்டில் வந்து ஒரு வேக இன்ஸ்விங்கரை வீச அவர் பவுல்டு ஆனார். இந்த நாளின் சிறந்த பந்து அது. டெய்லர் மட்டுஏ நின்று 41 ரன்கள் எடுத்தார். ஆனால் அவரை ஜாகீர் கான் வீழ்த்தினார். இந்த முறை சுமாரான பந்திற்கு விக்கெட் பெற்றுத் தந்தவர் ரஹானே. இதுவும் ஒரு அற்புத கேட்ச்.

இஷாந்த் சர்மா கடைசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நியூசீலாந்து சற்றும் எதிர்பாராத இந்தியாவின் தீவிரத்தினால் 105 ரன்களுக்கு சுருண்டது.

இன்று காலை இந்தியா 130/4 என்ற நிலையில் அனாவசியமான தேவையில்லாத பொறுப்பற்ற ஷாட்களில் ரஹனே, ரோகித் சர்மாவை இழந்தது. தோனிக்கு டெஸ்டில் ஆட வராதௌ அதனால் அவரை விட்டு விடுவோம், அவர் 10 ரன்களில் மீண்டும் கையேந்தி விட்டுப் போனார்.
webdunia
FILE

கடைசியில் ஜாகீர் கான் 14 ரன்களை எடுத்தார். மீண்டும் ஜடேஜா பேட்டிங்கில் அசத்தினார். 44 பந்துகளில் 2 பவுண்டரி கடைசியில் வாக்னரை மிட் ஆஃபில் ஒரு அபார சிக்ஸ் என்று 30 நாட் அவுட். போல்ட், சவுத்கீ தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்த வாக்னர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஃபாலோ ஆன் கொடுக்காமல் இந்தியா என்ன செய்து விடும் என்று அதீத தன்னம்பிக்கையில் மீண்டும் பேட் செய்தது மெக்கல்லத்தின் அகங்காரம் அது முறையாக அடக்கப்பட்டது. கிளார்க் போன்ற பெரிய கேப்டன்கள் எப்போதும் எதிரணியினருக்கு இருக்கும் வாப்புகளையும் கணக்கில் கொண்டே முக்கிய முடிவுகளை எடுப்பார். ஆக்ரோஷமான கேப்டந்தான் கிளார்க் ஆனால் அந்த ஆக்ரோஷம் கண்ணை மறைக்கும் அகங்காரமாக எப்போதும் ஆஸி. கேப்டன்களைடையே இருக்காது. மெக்கல்லம் தவறு செய்தார்.

இந்தத் தவறு இரண்டாவது இன்னிங்சில் தவானுக்கு ஒரு கேட்சை வீட்ட போது உறுதியானது. ஆனால் அதன் பிறகே தவான் சற்று ஆக்ரோஷம் காட்டி சில பவுண்டரிகளை அடித்தார். முரளி விஜய் 2வது இன்னிங்ஸில் மிகவும் நன்றாக வசதியாகவே உணர்ந்தார். ஆனால் லெக் திசையில் சென்ற பந்து பேடில் பட்டுச் செல்ல நடுவர் அவுட் கொடுத்து திகைப்பூட்டினார். இது மிகவும் மோசமாந்ன தீர்ப்பு
webdunia
FILE

அவர் 49 ரன்களுடனும் புஜாரா 1 பவுண்டரி ஒரு சிக்சருடன் 22 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்தியாவுக்கு தேவை மேலும் 320 ரன்கள். நியூசீலாந்தில் 348 ரன்களுக்கு மேல் துரத்தி எந்த அணியும் வென்றதில்லை.

பந்து வீச்சாளர்கள் இந்த வெற்றி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். இப்போது பந்து பேட்ஸ்மென்கள் கோர்ட்டில் உள்ளது. பார்ப்போம்!

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil