“என் ரோஜாவிற்கு ரோஜாக்கள்” காதல் மனைவியிடம் பாசத்தை பொழிந்த பாண்டியா!

Webdunia
செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (09:43 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஹர்திக் பாண்டியாவுக்கும், நடிகை நடாஷாவுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது என்பது தெரிந்ததே. இதையடுத்து இவர்களது திருமணம் ஓரிரு மாதங்களில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் திருமணம் தள்ளிப் போனது.

திருமணம் தள்ளிப் போனாலும் நடாஷா கர்ப்பம் ஆனதாக ஹர்திக் பாண்டே தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்தார். மேலும் கர்ப்பிணியாக இருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் அவ்வப்போது அவர் பதிவு செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இதையடுத்து கடந்த ஜூலை 30ம் தேதி ஹர்திக் பாண்டியாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனை  தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ” எனக்கு சிறப்பான பரிசு கொடுத்ததற்கு நன்றி என கூறி மனைவிக்கு ரோஜா பூங்கொத்து கொடுத்த புகைப்படத்தை பதிவிட்டு “என் ரோஜாவிற்கு ரோஜாக்கள்” என காதல் மழை பொழிந்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வொயிட் வாஷ் தோல்வி… உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் இந்தியா சரிவு!

முற்றிலும் சரணடைந்துவிட்டார்கள்.. இது நடந்திருக்க கூடாது: கும்ப்ளே கண்டனம்..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்: மோசமான தோல்வியால் பாகிஸ்தானுக்கு கீழே போன இந்தியா..!

இந்திய கிரிக்கெட்தான் முக்கியம், நான் முக்கியமில்லை.. தனது எதிர்காலம் குறித்த கேள்விக்கு காம்பீர் பதில்!

25 ஆண்டுகால இந்திய அணியின் சாதனையைத் தாரைவார்த்த கம்பீர் & கோ… ரசிகர்கள் ஆத்திரம்!

அடுத்த கட்டுரையில்