Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்த பாட்டுக்கு தான் பண்ணுவீங்களோ? டிடியை விளாசும் நெட்டிசன்ஸ்!

இந்த பாட்டுக்கு தான் பண்ணுவீங்களோ? டிடியை விளாசும் நெட்டிசன்ஸ்!
, புதன், 16 நவம்பர் 2022 (14:46 IST)
தொகுப்பாளினி டிடி வெளியிட்ட லேட்டஸ்ட் கியூட் வீடியோ இதோ!
 
விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஹீரோயின் ரேஞ்சுக்கு உச்சத்தை தொட்டவர் டிடி. அந்த நிகழ்ச்சிகளில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து தற்போது ஒருசில படங்களிலும் நடித்து வருகிறார். காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பெரும் பிரபலமான இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தனது தொகுப்பாளர் பணியை செய்து வருகிறார்.எவ்வளவு பெரிய உச்ச நடிகராக இருந்தாலும் எந்த வித பயமும் இன்றி பட படவென அனல் பறக்கும் ரேப்பிட் பஃயர் கேள்விகளை கேட்டு உச்ச நடிகர்களை திக்குமுக்காட செய்திடுவார் டிடி.
 
சினிமா உலகை பொறுத்தவரையில் திறமைக்கு ஏற்ற அளவுக்கு அழகும் தேவை. அந்த விஷயத்தில் டிடி தன் திறமைக்கு ஏற்றவாறே பார்ப்பதற்கு அழகான முகபாவனையும் கொண்டிருப்பவர். விஜய் டிவியில் எத்தனையோ தொகுப்பாளினிகள் இருந்தாலும் ரசிகர்களின் என்றும் பேவரைட் தொகுப்பாளினியாக இருந்து வருவது டிடி தான். இவர் தற்போது திரைப்படங்களில் கூட நடிக்க துவங்கிவிட்டார்.
 
இதற்கிடையில் சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் டிடி அடிக்கடி தனது புகைபடங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஹிந்தி பாடல் ஒன்றுக்கு எக்ஸ்பிரஷன்ஸ் எல்லாம் பயங்கரமாக கொடுத்து ரசிகர்களின் ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார். இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/p/ClBfOXpg_Ef/

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சன்னிலியோன் மீது பணமோசடி வழக்கு: கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!