Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் இளமை துள்ளலுடன் துள்ளுவதோ இளமை ஷெரின் - படங்கள்

Webdunia
வியாழன், 12 ஜூன் 2014 (14:22 IST)
அழகும் அபிரிதமான திறமையும் கொண்ட நடிகை ஷெரின். துள்ளுவதோ இளமைக்குப் பிறகு பெரிய ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்டவர் திறமைக்கு தீனி போடாத படங்களில் நடித்தே திரையுலகிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

தனது அழகான தெற்றுப்பல்லை சரிசெய்து மீண்டும் நடிக்க ஆரம்பித்தவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. கடைசியாக பீமா படத்தில் ஒரு பாடலுக்கு விக்ரமுடன் ஆடியதாக ஞாபகம். நந்தாவுடன் ஒரு படத்திலும் நடித்தார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஷெரின். படம் மலேசியா நண்பர்கள்.
 
கரண் நடித்த தீ.நகர், ஷாம் நடித்த அகம் புறம் படங்களை இயக்கியவர் திருமலை. நெல்லை சந்திப்பு, மான் வேட்டை போன்ற படங்களை தயாரித்தும் இருக்கிறார். இவர் இயக்கி நாயகனாக நடிக்கும் படம்தான் மலேசியா நண்பர்கள். இந்தப் படத்தில் ஷெரின் ஹீரோயினாக ரீ என்ட்ரியாகிறார்.
மலேசியா தமிழர்கள் சொந்தமாக படங்கள் எடுக்க ஆரம்பித்துள்ளனர். மலேசியா தமிழர்களுக்காக இங்குள்ள திரை நட்சத்திரங்கள் நடிப்பதும், படம் இயக்குவதும் உண்டு.

இந்தவகை படங்கள் மலேசியாவில் மட்டுமே திரையிடப்படும். பாக்யராஜ்கூட அப்படியொரு மலேசிய தமிழ் படத்தில் நடித்தார். 
 

ஆனால் மலேசியா நண்பர்கள் தமிழகத்தில் வெளியிடுவதற்காக எடுக்கப்படுகிறது. ஷெரினுக்கு இந்தப் படம் சிறப்பான ரீ என்ட்ரியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.








 
 
 
 

மீண்டும் இளமை துள்ளலுடன் ஷெரின் - படங்கள்








மீண்டும் இளமை துள்ளலுடன் ஷெரின் - படங்கள்










 

 

மீண்டும் இளமை துள்ளலுடன் ஷெரின் - படங்கள்








மீண்டும் இளமை துள்ளலுடன் ஷெரின் - படங்கள்








 

மீண்டும் இளமை துள்ளலுடன் ஷெரின் - படங்கள்









 

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

Show comments