வென்னிலா கேக் எளிய முறையில் செய்ய இயலும். சுவையும் அதிகமாக இருக்கும். கிறிஸ்மஸ் அல்லது புத்தாண்டு அன்று செய்து சுவையுங்கள்.
தேவையானப் பொருட்கள்
முட்டை - 5
மைதா மாவு - 2 கப்
சர்க்கரை - 2 கப்
மார்கரின் - 1 கப்
வென்னிலா எசன்ஸ் - 2 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி
தயிர் - 2 தேக்கரண்டி
செய்முறை
சர்க்கரையை மிக்ஸியில் போட்டு தூளாக அரைத்துக் கொள்ளவும்.
அத்துடன் மார்கரினை கலந்து நன்கு நுரைத்து வரும் வரை கரண்டியை வைத்து அடித்துக் கொள்ளவும்
முட்டைகளை உடைத்து ஊற்றி அதையும் நன்றாக அடித்து அதை, சர்க்கரை, மார்கரின் கலவையுடன் சேர்க்கவும். அதில் தயிர், எசன்ஸ் சேர்த்து கொள்ளவும்.
மைதா மாவுடன் பேக்கிங் பவுடரை சேர்த்து சலித்து உருண்டை இல்லாமல் தூளாக வைத்துக் கொள்ளவும்.
அதில் மைதா மாவையும் ஊற்றி அந்த பாத்திரத்தை தூக்கிப் பிடித்து ஒரே பக்கமாக கலக்கவும். பின் கேக்கிற்கான பரந்த பாத்திரத்தில் வெண்ணெய் தடவி அதில் மாவினைக் கொட்டி 35 நிமிடம் வேக விடவும்.
கேக் நன்கு வெந்ததும் இறக்கி அலங்கரித்து வைக்கவும்.