Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிறித்தவர்களின் ஒரு முக்கியமான திருநாள்; கிறிஸ்து பிறப்பு

Webdunia
கிறிஸ்து பிறப்புவிழா கிறித்தவர்களின் ஒரு முக்கியமான திருநாளாகும். இது பெரும்பாலான கிறித்தவர்களால் டிசம்பர் 25ஆம்  நாள் கொண்டாடப்படுகிறது. டிசம்பர் 24 ஆம் நாள் நள்ளிரவில் கிறித்தவர் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு நடத்துவர்.  கத்தோலிக்கர் நள்ளிரவுத் திருப்பலியில் கலந்துகொண்டு நற்கருணை விருந்தில் பங்கேற்பர். 
கிறிஸ்து பிறப்புவிழாவிற்கு அடையாளமாக நானல் போன்ற புல்லினால் குடில் கட்டி குழந்தை இயேசு, மரியாள், யோசேப்பு,  இடையர்கள், ஞானிகள் செரூபங்களை வைப்பர் விண்மீன்களுக்கு அடையாளமாக காகதித்தாலான விண்மீன்களை வண்ண  விளக்குகளால் அலங்கரிப்பார். 
 
வீடுகளில் விருந்து நடைபெறும். எல்லாரும் புத்தாடை அணிவர். நண்பர்களையும் உறவினரையும் சந்திக்கச் செல்வர். மேலும்  இரவில் வான வேடிக்கைகள் நடைபெறும். பல இடங்களில் கிறிஸ்துமஸ் பஜனை நடைபெறும். அப்போது பாடல் குழுவினர்  அணியாகச் சென்று வீடுகளைச் சந்தித்து கிறிஸ்துமஸ் பாடல்கள் இசைப்பார்கள்.
 
கிறிஸ்துவர்களோடு பிர சமயத்தவரும் இணைந்து இவ்விழாவைக் கொண்டாடுகின்றனர். இது சமய நல்லிணக்கம் உருவாக  உறுதுனையாக உள்ளது என்பதில் ஐயமில்லை.

தொடர்புடைய செய்திகள்

மீனாட்சி அம்மன் கோவிலின் தெப்பக்குளத்தின் சிறப்புகள்

இந்த ராசிக்காரர்களுக்கு பணவரத்து நன்மை தரும்! - இன்றைய ராசி பலன் (04.05.2024)!

மீனாட்சி அம்மன் கோவிலில் வன்னிமரத்தடி விநாயகர் கோவில்

இந்த ராசிக்காரர்களுக்கு கணவன், மனைவி இடையே கருத்து வேற்றுமை நீங்கும்! - இன்றைய ராசி பலன் (03.05.2024)!

வன்னி மரத்தை வணங்குவதால் ஏற்படும் பலன்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments