Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரமோற்சவ விழா

Webdunia
சனி, 13 மே 2023 (21:43 IST)
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றும் பிரசித்தி பெற்ற அத்திவரதர் கோவிலுமான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி பிரமோற்சவம் நடைபெறும்.

இவ்வாண்டு வைகாசி பிரமோற்சவத்தை ஒட்டி இன்று காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவில் பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஒலிக்க கற்பூர ஆரத்திகாட்டி, பந்தக்கால்  நட்டு விழா ஏற்பாடுகளை ஆரம்பித்து வைத்தனர்.

வரும் 31 ஆம்தேதி பிரமோற்சவ விழா நடைபெறவுள்ள நிலையில்,  ஜூன் 2 ஆம் தேதி கருடசேவை உற்சவமும், ஜூன்  ஆம் தேதி திருத்தேர் உற்சவமும், 8 ஆம் தேதி தீர்த்தவாரி உற்சவமும்,  என மொத்தம் 10 நாள் காலை மாலை என இரு வேளை  உற்சவம்  நடைபெறவுள்ளது.

அப்போது, உற்சவத்தில் தங்க பல்லக்கு, யானை வாகனம், சப்பரம் உள்ளிட்ட வாகனங்களில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் காஞ்சிபுரம் ராஜவீதிகளில் வீதி உலா வரவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்மனுக்கு வளைகாப்பு! அருளை அள்ளித் தரும் ஆடிப்பூரம் வழிபாடு! வளையல் சார்த்தினால் நன்மை!

இந்த ராசிக்காரர்களுக்கு பழைய பாக்கிகள் தாமதமாகும்! இன்றைய ராசி பலன்கள் (24.07.2025)!

ஆடி அமாவாசை: ஒகேனக்கல், தீர்த்தமலை, தென்பெண்ணை ஆற்றில் திரண்ட பக்தர்கள்!

இந்த ராசிக்காரர்களுக்கு நீண்ட கால நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும்! இன்றைய ராசி பலன்கள் (24.07.2025)!

நாளை ஆடி அமாவாசை: முன்னோரை வழிபட்டு நல்வாழ்வு பெறும் அற்புத நாள்!

அடுத்த கட்டுரையில்
Show comments