Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயேசு சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூறும் புனித வெள்ளி!

Webdunia
புனித வெள்ளி என்பது கிறிஸ்தவர்களுக்கு ஒரு முக்கியமான நாளாகும். இது இயேசு உயிர்த்த ஞாயிறு தினத்துக்கு முன்னரான வெள்ளிக்கிழமையில் அனுசரிக்கப்படும். இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூறுவதாக இது அனுசரிக்கப்படுகிறது. 
இத்தினத்தில் கிறிஸ்தவர் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபடுவர். இவை பொதுவாக இயேசு சிலுவையில் அறையப்படுவதை நினைவுகூரும் வகையிலிருக்கும். கத்தோலிக்கர் இந்நாளில் நோன்பிருந்து வெள்ளாடை அணிந்து சிலுவைப்பாதையில் பங்கெடுப்பது வழக்கமாகும். இத்தினமானது தூயவெள்ளி, நீண்ட வெள்ளி,  சோக வெள்ளி, பெரிய வெள்ளி என இடத்துக்கிடம் வேறு பெயர்களை கொண்டுள்ளது.
இத்தினமானது தூயவெள்ளி, நீண்ட வெள்ளி, சோக வெள்ளி, பெரிய வெள்ளி என இடத்துக்கிடம் வேறு பெயர்களை கொண்டுள்ளது. இயேசு மரித்தது  வெள்ளிக்கிழமையாகும். மேலும் இயேசு மரித்த நாள் கி.பி. 33 ஏப்ரல் 3-ஆம் நாளாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இத்தினத்தில் பகுதி சந்திரகிரகணமும்  ஏற்பட்டுள்ளது. (இயேசு சிலுவையில் உயிர் நீத்தபோது வானம் இருண்டது). தற்போது புனித வெள்ளி ஏப்ரல் 23-க்கும் மே 7-க்குமிடையே ஒரு வெள்ளியில்  அனுசரிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்கள் பண முதலீட்டில் அவசரம் காட்ட வேண்டாம்! - இன்றைய ராசி பலன்கள் (14.02.2025)!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தெப்பத்திருவிழா.. சிறப்பு ஏற்பாடுகள்..!

இந்த ராசிக்காரர்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கும் நாள் இன்று! - இன்றைய ராசி பலன்கள் (13.02.2025)!

கேரளாவில் உள்ள இந்த கோவிலுக்கு சென்றால் திருப்பதி சென்ற பலன் கிடைக்குமா?

இந்த ராசிக்காரர்களுக்கு நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும்! - இன்றைய ராசி பலன்கள் (12.02.2025)!

அடுத்த கட்டுரையில்
Show comments