Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விடுகதை‌களை படி‌த்து‌ப் பாரு‌ங்க‌ள்

Webdunia
வியாழன், 27 ஆகஸ்ட் 2009 (15:20 IST)
‌ விடுகதைக‌ள் தெ‌ரி‌ந்து கொ‌ள்வது‌ம், அதனை ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் கே‌ட்பது‌ம் ‌மிகவு‌ம் சுவார‌ஸ்யமான ‌விஷய‌ம்தானே?

1. தாய் இனிப்பாள்; மகள் புளிப்பாள்; பேத்தி மணப்பாள். அவர்கள் யார்?
2. கறுப்பு மைதானத்தில் கொளுத்தும் சூட்டிலும் புரண்டு புரண்டு தூங்குது வெள்ளைக் குதிரை. அது என்ன?
3. அழைக்காமல் வரும் விருந்தாளி; ஆளை அலைக்கழிக்காமல் செல்லமாட்டான். அவன் யார்?
4. ஊரெல்லாம் மூடியிருக்கும்; ஊறுகாய் பானை திறந்தே இருக்கும். அது என்ன?
5. சின்னச் சின்ன சாத்தான்; வயிறு பெருத்துச் செத்தான். அவன் யார்?
6. மாமா போட்ட பந்தல்; மறுபடி பிரிச்சா கந்தல். அது என்ன?
7. ஆற்றில் விழுந்தாலும் ஆழ்கடலில் விழுந்தாலும் எ‌ரி‌ந்து கொ‌ண்டே இரு‌ப்பா‌ன். அவன் யார்?

விடைகள்:

1. பால், தயிர், நெய்
2. தோசைக்கல், தோசை
3. நோய்
4. கிணறு
5. பருத்தி
6. சிலந்தி வலை
7. சூரிய ஒளி

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments