Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெ‌ண்க‌ளை‌ப் ப‌ற்‌றி‌க் கு‌றி‌ப்‌பிடு‌ம் பழமொ‌ழிக‌ள்

Webdunia
செவ்வாய், 13 ஏப்ரல் 2010 (14:21 IST)
பெ‌ண்களை‌த் தொட‌ர்புபடு‌த்‌தி பல பழமொ‌ழிக‌‌ள் உ‌ள்ளன. அவை அனை‌த்தையு‌ம் இ‌ங்கு தர முடியாது. எ‌னினு‌ம் ‌சிலவ‌ற்றை‌த் தொகு‌த்து அ‌ளி‌த்து‌ள்ளோ‌ம்.

ஆவது‌ம் பெ‌ண்ணாலே, அ‌‌ழிவது‌ம் ‌பெ‌ண்ணாலே. (ந‌ன்மைக‌ள் ஆவது‌ம் பெ‌ண்ணாலே, ‌‌தீமைக‌ள் அ‌ழிவது‌‌ம் பெ‌ண்ணாலே)

பெ‌ண் பு‌த்‌தி ‌பி‌ன் பு‌த்‌தி (‌எ‌தி‌ர் வரு‌ம் ‌விஷய‌ங்களை‌க் கூட ‌சி‌ந்‌தி‌த்து அ‌றிய‌க் கூ‌டியவ‌ள் பெ‌ண்)

நூலைப் போல சேலை, தாயைப் போல பிள்ளை.

தாயிற் சிறந்த கோவிலுமில்லை. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை.

தாய் தவிட்டுக்கு அலைகிறபோது பிள்ளை இஞ்சிப் பச்சடி கேட்டு அழுதுச்சாம்.

தாயும் பிள்ளையும் ஒன்றானாலும் வாயும் வயிறும் வேறுதானே?

அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா.

டில்லிக்கு ராஜா ஆனாலும் தல்லிக்குப் பிள்ளைதானே!

ஆடத் தெரியாதவள் தெரு கோணல் என்றாளாம்.

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும்.

அழுதழுது பெற்றாலும் அவள்தானே பெற வேண்டும்?

பெண் என்றால் பேயும் இரங்கும்.

அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments