Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேனா

Webdunia
எழுத்தை வரையும் பேனா
போற்றியேக் காக்க வேணும்!
கழுத்தின் அருகில் பிடித்து-எழுத
காகிதம் அழகாய் தோணும்.

கவிஞர் நாவல் ஆசான் - நல்ல
கருத்தைச் சொல்ல உதவும்!
புவியில் மாற்றம் வரவே! - பேனா
உண்மை என்றும் கூறும்.

தேர்வில் நன்றாய் எழுத - என்றும்
தேவை பேனா ஒன்று!
பார்ப்போற்றும் மார்க்ஸும் - அதனால்
மூலதனமும் படைத்தார் அன்று!

நண்பர் இரவல் கேட்டால் - அதை
நானும் தருவேன் அன்பால்!
கண்ணின் மணியைப் போலவே - நான்
கருத்தால் காப்பேன் அறிவால்!

வாரம் ஒரு நாள் பேனாவும் - சுத்தம்
ஆகி விடுமே தவறாமல்!
யாரும் உதவி கேட்டாலும்- மனம்
மகிழ்வாய் செய்வேன் உதறாமல்.

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments