Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

5 வருடங்களாக காதுக்குள் சிறைபட்டிருந்த கல்

5 வருடங்களாக காதுக்குள் சிறைபட்டிருந்த கல்
, செவ்வாய், 29 ஏப்ரல் 2008 (11:10 IST)
சிறுவன் ஒருவன் தனது காதுக்குள் போட்டுக் கொண்ட கல், 5 வருடங்களுக்கு பின்பு காதில் இருந்து விடுபட்டது.

டெர்பியில் உள்ள பிரைய்ல்ஸ·போர்ட் கிராமத்தில், ஜோ பின·பீல்ட் என்ற சிறுவனுக்கு தற்போது 10 வயதாகிறது. அவன் 5 வயதாக இருந்தபோது தனது பள்ளி மைதானத்தில் இருந்த ஒரு சிறியை கல்லை விளையாட்டாக தனது காதில் போட்டுக் கொண்டுள்ளான்.

சிறிது நாட்களில் அவன் காதுகளில் வலியும், காது கேளாத் தன்மையும் ஏற்பட்டுள்ளதை பெற்றோரிடம் தெரிவித்தும், அவர்கள் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

பள்ளி இறுதித் தேர்வின்போது, ஜோவின் தாயை அழைத்த பள்ளி ஆசிரியை, ஜோவினால் நாங்கள் கூறுவதை சரியாக புரிந்து கொள்ள இயலவில்லை. அதனால் அவனை அடு‌த்த வகு‌ப்‌பி‌ற்கு தே‌ர்‌‌ச்‌சி பெற வை‌க்க முடியாது என்று கூறிவிட்டனர்.

இதையடுத்து பல முறை மருத்துவமனைக்குச் சென்றும் எந்த பலனும் இல்லை.

இந்த நிலையில்தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது, கைவிரல் நகம் அளவில் இருந்த அந்த கல் ஜோவின் காது துளை வழியாக வெளியேறியது.

எப்படித்தெரியுமா? ஜோவின் தாய், ஜோவை சுடு தண்ணீரில் குளிக்க வைத்து, துடை‌த்தெடு‌த்து, அவனது காதை ஆராய்ந்தாள். அப்போது காதுக்குள் ஏதோ ஒன்று நகர்வதை அவள் உணர்ந்தாள். அதை அடுத்து அந்த காதின் துவாரம் தரையைப் பார்த்தபடி தலையை வைத்து நன்கு ஆட்டினாள். அப்போது திடீரென காதுக்குள் இருந்த அந்த கல் கீழே வந்து விழுந்தது.

இதுபற்றி ஜோவின் தாய் கூறுகையில், அந்த நிமிடம் நான் மகிழ்ச்சியில் அழுதே விட்டேன். அந்த கல்லைக் கொண்டு போய் மருத்துவர்களிடம் காண்பித்தேன். பல்வேறு சோதனைகளின் போது அந்த கல்லை அறியாமல் போனதற்கு மருத்துவர்கள் மன்னிப்புக் கேட்டனர். மேலும், காது கேளாத தன்மைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளச் சொல்லியிருந்த மருத்துவமனையிடமும் கல்லைக் கொண்டு போய் காண்பித்தேன். அவர்களும் தவறுக்கு மன்னிப்புக் கோரினர் என்றார்.

தனது காதில் இருந்து விழுந்த அந்தக் கல்லை கைகளில் வைத்திருக்கும் ஜோ, இந்தக் கல்லை நான் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருந்து எனது பிள்ளைகளுக்குக் காண்பிப்பேன். அத்துடன், காதில் எதையும் போட்டுக் கொள்ளக் கூடாது என்று அவர்களை நான் எச்சரிப்பேன் என்று மழலை மாறாத மகிழ்ச்சியுடன் அவன் கூறினான்.

Share this Story:

Follow Webdunia tamil