Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோழிகளின் மேஜிக் உலகம்

Webdunia
வியாழன், 23 ஜனவரி 2014 (15:35 IST)
மூணாவது படிக்கும் பார்கவி செம சுட்டி. அதுவும் அவளோட தோழி தாணுவோட சேர்ந்துட்டா அவ்ளோதான். பயங்கரமா அமர்க்களம் பண்ணுவாங்க. புதுசு, புதுசா யோசிப்பாங்க. அவங்க தெருவுல இருக்கற மஞ்சுளா வேற ஸ்கூல்ல படிக்கறா. அவ மேஜிக்னு சொல்லி விரல்ல ஏதோ பண்ணுவா. அதனால ரெண்டு பேருக்கும் மேஜிக் கத்துக்கணும்னு ஆசை.

அவங்க பள்ளியில ஒரு வயசான மேஜிக் மேன் வந்தார். எல்லோருக்கும் மேஜிக் காட்டவான்னு டீச்சர்கிட்ட கேட்டார். அவங்களும் அனுமதி தந்துட்டாங்க. எல்லோருடைய முன்னாலயும் மேஜிக் பண்ணார். அவரோட ஷோவுல முயல், கர்ச்சீப் எல்லாம் வந்துச்சு. நெருக்கும் கெளம்பிச்சு. இதை பார்த்த பார்கவிக்கும், தாணுவுக்கும் ஒரே சந்தோஷம். இந்த தாத்தாகிட்ட கொஞ்சம் மேஜிக் கத்துக்கணும்னு நெனைச்சாங்க. இதெல்லாம் கத்துக்கிட்டு, மஞ்சுளாகிட்ட செஞ்சு காமிச்சா எப்படி இருக்கும்னு யோசிச்சாங்க. இந்த தாத்தாவோட மேஜிக்குக்கு விரல் மேஜிக்கெல்லாம் ஜுஜுபின்னு நெனைச்சாங்க.

ஷோ முடிஞ்சவுடனே மத்தவங்க கெளம்பி போயிட்டாங்க. ஆனா பார்கவியும், தாணுவும் அங்கேயே இருந்தாங்க. அவங்களுக்கும் இப்படி மேஜிக் பண்ணனும்னு ஆசை வநதுச்சு. மேஜிக் மேனும் அவங்க நிக்கறத கவனிச்சார். மூணு பேரும் மட்டும் தான் அந்த ஹால்ல இருந்தாங்க.

“உங்களுக்கு என்ன வேணும்” என்று கேட்டார். “மேஜிக் கத்துக்கணும்” என்று ரெண்டு பேரும் சொன்னாங்க. அய்யயோ... இதெல்லாம் பெரிய மேஜிக். அது வேணாம். கஷ்டம். படிக்கற வழிய பாருங்க” என்று அவர் சொன்னார். ”முடியாது. கத்துத் தருவியா, மாட்டியா” என்று ரெண்டு பேரும் கத்தினாங்க. மேஜிக் கிழவன் யோசிச்சார். அவர் கத்துத்தரலேன்னா, மத்த யார்கிட்டயாவது கத்துப்பாங்க. அப்படி கத்துத் தர்றவங்க தப்பா கத்துத் தந்தா பிரச்சனைனு நினைச்சார். சின்ன பசங்களுக்கு ஒண்ணு, ரெண்டு மட்டும் கத்துத்தரலாம்னு சொன்னான ்.

“கத்துத் தர்றேன். ஆனா முதல்ல அதோ இருக்கற பெட்டியில போகணும். முடியுமா”னு கேட்டார். பெட்டிக்குள்ள போய் பார்த்தாங்க. முயல், கர்ச்சீப், கத்தி, தீப்பெட்டி எல்லாம் இருந்துச்சு. “ஓ... அதனால தான் அடிக்கடி பெட்டிக்குள்ள கை வக்கறியா. உன்கிட்ட புதுசா எதுவும் இல்லையா” என்று தாணு மேஜிக் தாத்தாவிடம் கேட்டா. “ஆமா. யார்கிட்டயும் சொல்லாத. அப்புறம் டீச்சர் என்ன திரும்ப கூப்பிட மாட்டாங்க”ன்னார். பார்கவிக்கும், தாணுவுக்கும் பாவமா இருந்துச்சு. யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்னு சொன்னாங்க.

இப்போ அவங்க ரெண்டு பேருக்கும் வேற ஒரு கவலை. மஞ்சுளாகிட்ட வேற எத காட்டி அலட்டிக்க முடியும்னு. தாத்தா சொன்னார். “கவலப்படாதீங்க. எனக்கு சூப்பரான விரல் மேஜிக் தெரியும். அதெல்லாத்தையும் கத்துத்தரேன்” என்று சொன்னார். தோழிகளுக்கு சந்தோஷம். எல்லாத்தையும் ஒண்ணு விடாம கத்துக்கிட்டாங்க. எல்லாமே மஞ்சுளா பண்ற மாதிரி இல்லாம புதுசா இருந்துச்சு. தாத்தாகிட்ட தாங்க்ஸ் சொன்னாங்க.

இப்பல்லாம் மஞ்சுளா பார்கவியையும், தாணுவையும் ஆச்சரியத்தோட பார்க்கறா. அவங்ககிட்ட அலட்டிக்கறத விட்டுட்டு ஃப்ரெண்ட் ஆயிட்டா. இதெல்லாத்தையும் விட ரெண்டு பேருக்கும் ஒரு ரகசியம் தெரியும்னு யார்கிட்டயும் சொல்லவே இல்ல.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments