Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரு ‌- ‌சி‌ஷ‌்ய‌‌னி‌ன் குட்டிக் கதை

Webdunia
ஒரு புத்த குருவும், அவருடைய சிஷ்யரும் ஆற்றைக் கடந்து மறு கரைக்குச் செல்ல வேண்டிய நிலையில் கரைப் பகுதிக்கு வந்தனர்.

அப்போது அங்கு வந்த ஒரு பெண்மணி, குருவிடம், நானும் இந்தக் கரையைக் கடந்து அக்கரைக்குச் செல்ல வேண்டும். உங்களால் எனக்கு உதவ முடியுமா என்று கோரினாள்.

சரி என்ற குரு, அந்தப் பெண்ணை தோளில் தூக்கிக் கொண்டு ஆற்றில் இறங்கினார். சிஷ்யனுக்கு பயங்கர அதிர்ச்சி. ஒரு துறவி, ஓர் இளம் பெண்ணை தோளில் தூக்கிச் செல்வது தகுமா? துறவியின் புனிதத் தன்மை கெட்டு விடுமே என்று பதறினான்.

மறு கரை வந்ததும், குரு அந்தப் பெண்ணை இறக்கிவிட்டுவிட்டார்.

சிஷ்யனுக்கோ மனதில் பெரும் குழப்பம். குருவிடம் எப்படிக் கேட்பது என்று புரியாமல் மனதில் இதைப் பற்றிய அலசியபடி வந்து கொண்டிருந்தான்.

நீண்ட தூரம் சென்ற பின் மரத்தடி ஒன்றில் இருவரும் ஓய்வெடுக்க அமர்ந்தனர். அப்போது அந்த சிஷ்யன் தனது மனதில் இருந்த கேள்வியை குருவிடம் கேட்டான்.

அதற்கு குரு இவ்வாறு பதிலளித்தார், நான் அந்தப் பெண்ணை ஆற்றங்கரையிலேயே இறக்கிவிட்டுவிட்டேன். நீ இன்னும் இறக்கி வைக்கவில்லையா? என்று கேட்டார்.

உடனே சிஷ்யன் தலைகுனிந்து நின்றான்.

நீதி : எந்த ஒரு காரியமும் நமது மனதை அடிப்படையாக வைத்தேப் பார்க்கப்படுகிறது. நல்ல காரியத்தையும் கெட்ட மனதுடன் செய்யும் போது அதன் பலனும் கெட்டதாகவே முடியும். நல்ல மனதுடன் எதைச் செய்தாலும் அது நல ் லதாகவே இருக்கும்.

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments