Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கதை சொல்லும் வாசு‌கி பாட்டி

Webdunia
சனி, 20 ஜூன் 2009 (16:27 IST)
இனி குழந்தைகளுக்கு கதை சொல்வதில் எந்த பிரச்சினையும் இருக்காது. வாசுகி பாட்டி இனி உங்களுக்கு கதை சொல்ல வந்துவிடுவார்கள்.

சரி இந்த வாரம் என்ன கதை சொல்லப் போறீங்க பாட்டி என்று நாம் கேட்டதுதான் தாமதம், கதையையே ஆரம்பித்துவிட்டார்.

ஒரு நரி, ஓநாயிடம் வந்து தனது புலம்பலைக் கூறியது. அதாவது, சேவலும், கோழியும் தின்று தின்று நாக்கே செத்துப் போய்விட்டது. ஏதாவது கொழுத்த ஆட்டை வேட்டையாடி சாப்பிட ஆசையாய் உள்ளது. ஆனால் எனக்கோ வேட்டையாத் தெரியாது. என்ன செய்வது என்று புலம்பியது.

மேலும், ஓநாயே நீதான் நன்றாக வேட்டையாடுகிறாயே... எனக்கும் கொஞ்சம் வேட்டையாட சொல்லிக் கொடேன் என்றுக் கூறியது.

இதனைக் கேட்டு மனம் இறங்கிய ஓநாயும் பயிற்சி அளிக்க சம்மதம் தெரிவித்து, தினமும் பயிற்சி பெற ஓநாயின் தோலை உடுத்திக் கொண்டு வர கட்டளை இட்டது.

அதன்படியே நரியும் ஓநாயின் தோலை உடுத்திக் கொண்டு, பாய்தல், உறுமுதல், கடித்தல் என சகல பயிற்சியையும் எடுத்து சகலகலா வல்லவனாக மாறியது.

ஒரு நாள் ஓநாய் தோலுடன் சென்ற நரி, ஆட்டு மந்தைக்குள் புகுந்து ஆட்டின் கழுத்தை கவ்வியது. அந்நேரம் பாரத்து ஒரு கோழி எங்கேயோக் கூவியது. அவ்வளவுதான், ஆட்டைப் பற்றிய நரி, அதனை விட்டுவிட்டு கோழியைப் பிடிக்க ஓடியது.

என்னதால் பயிற்சி பெற்று பெரிய ஆளானாலும், மனதின் இயற்கை குணம் மட்டும் மாறவே மாறாது என்பது இதன் மூலம் நமக்கு புரிகிறதல்லவா குழந்தைகளா?

மீண்டும் அடுத்த வாரம் ஒரு கதையுடன் உங்களை இந்த பாட்டி சந்திப்பேன். சரிய ா
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments