Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விடுகதைகளு‌க்கு ‌விடைக‌ள்

Webdunia
செவ்வாய், 9 மார்ச் 2010 (17:59 IST)
‌ விடுகதைகளு‌க்கு ‌விடைக‌ள் தெ‌ரி‌கிறதா பாரு‌ங்களே‌ன் ‌பி‌ள்ளைகளா...

1. அச்சு இல்லாத சக்கரம்; அழகு காட்டும் சக்கரம். அது என்ன?
2. வெளியில் விரியும்; வீட்டில் சுருங்கும். அது என்ன?
3. மரம் உண்டு, இலை இல்லை; கொடி உண்டு, பூ இல்லை. அது என்ன?
4. கிணற்றுக்குள்ளே கிண்ணம் மிதக்குது. அது என்ன?
5. வட்ட வட்ட பாய்; வாழ்வு தரும் பாய்; ஊர் சுற்றும் பாய். அது என்ன?
6. பச்சை வீட்டுக்கு சிவப்பு வாசல். அது என்ன?
7. அவள் பறக்கும் போது தீப்பொறி பறக்கும். அது என்ன?
8. " அடியடா பிடியடா' என்பவன் அறையை விட்டு வெளியே வரமாட்டான். அவன் யார்?
9. வாய் பூ; வாடாத பூ. அது என்ன?
விடைகள் :

1. வளையல்
2. குடை
3. மெழுகுவர்த்தி
4. முழுநிலா
5. ரூபாய்
6. கிளி
7. மின்மினிப் பூச்சி
8. நாக்கு
9. சிரிப்பு

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments