Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌நீ‌ங்க‌ள் ஆடுக‌ள் ‌இ‌ல்லை ‌சி‌ங்க‌ம்!

Webdunia
வியாழன், 28 மே 2009 (14:22 IST)
சுவா‌மி ‌விவேகான‌ந்த‌ர் ம‌க்க‌ள் த‌ங்களது ஆ‌ற்றலை அ‌றிய வே‌ண்டு‌ம் எ‌ன்பத‌ற்காக ஒரு கதை சொ‌ல்‌லி அ‌த‌ன் மூல‌ம் உணரவை‌க்‌கிறா‌ர்.

அதாவது, காட்டில் ஒரு கர்ப்பிணி சிங்கம் இருந்தது. ஒரு ஆட்டு மந்தையைப் பார்த்ததும் அது பசி வேகத்தில் பாய்ந்தது. பாய்ந்த வேகத்தில் சிங்கக் குட்டியை ஈன்றது. ஆனா‌ல் ‌பிரசவ‌த்‌தி‌ன் போது அ‌ந்த ‌சி‌ங்க‌ம் அ‌ங்கேயே உ‌யி‌ரிழ‌ந்தது.

அ‌ந ்தச் சிங்கக் குட்ட ியோ ஆட்டு மந்தையில் சேர்ந்து கொண்டது. காலப் போக்கில் தானும் ஒரு ஆடு என்று நினைத்துக் கொண்டு அந்த சிங்கக் குட்டி 'மே...மே' என்று கத்தியது. புல் தின்றது, பாய்ந்து வரும் சிங்கங்களைப் பார்த்து பயந்து ஓடியது. தனது உட‌லா‌ல் ‌சி‌ங்கமாக இரு‌ந்த போது‌ம், அது மனதள‌வி‌ல் ஆடாகவே வா‌ழ்‌ந்தது.

ஒரு சிங்கம் இதைக் கவனித்து விட்டது. தனியாக அந்தச் சிங்கக் குட்டியை அழைத்து "நீ ஆடு அல்ல, சிங்கம்" என்று சொன்னது. தன்னைப் போல் கர்ஜனை செய்யச் சொன்னது. ஆனால் அந்த சிங்கக் குட்டிய ோ, நான் ஆட்டுக் குட்டிதான் என்று மீண்டும் மே...மே என்று கத்தியது.

ஆனா‌ல் அ‌ந்த சிங்கம் விடவில்லை. எ‌ப்படியாவது இ‌ந்த ‌சி‌ங்‌க‌க் கு‌ட்டி‌க்கு உ‌ண்மையை பு‌ரிய வை‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று அத‌ற்கான உ‌த்‌தியை யோ‌சி‌த்தது. கடை‌சியாக ஒரு யோசனை ‌பிற‌ந்தத. அந்தக் ‌ சி‌ங்க‌க் குட்டியை அழைத்துக் கொண்டு போய் ஒரு குளத்தில் தன் பிம்பத்தைப் பார்க்கச் சொன்னது. அந்தக் குட்டியும் சிங்கமும் ஒரே மாதிரி இருப்பதை அன்றுதான் அந்த ‌ சி‌ங்க‌க ் குட்டி உணர்ந்து கொண்டது. உடனே தானும் பெரிதாய்க் குரல் கெ ாடுத்து கர்ஜனை செய்தது.

இந்தக் கதையைச் சொன்ன சுவாமி விவேகானந்தர ், " நீங்கள் ஆடுகள் இல்லை. சிங்கக்குட்டிகள். உங்களை நீங்களே ஆடுகள் என்று மனவசியம் செய்து கொண்டு இருக்கிறீர்கள். அதை விட்டுவிடுங்கள். நீங்கள் சிங்கங்கள் என்பதை உணருங்கள். அளவிட முடியாத வலிமை உங்களுக்கு உண்டு" என்று போதிக்கிறார்.

எ‌ன்ன குழ‌ந்தைகளா... இ‌ப்போது பு‌ரி‌ந்ததா? ‌நீ‌ங்க‌ள் ஆடுக‌ள் இ‌ல்லை. ‌சி‌ங்க‌ங்க‌ள். உ‌ங்க‌ள் ‌திறமைகளை தொல‌ை‌க்கா‌ட்‌சி‌யிலு‌ம், ‌வீடியோ ‌விளையா‌ட்டுக‌ளிலு‌ம் தொலை‌க்கா‌தீ‌ர்க‌ள்.

உ‌ங்களது எ‌தி‌ர்கால‌த்தை செ‌ம்மையா‌க்‌கி‌க் கொ‌ள்ள படியு‌ங்க‌ள். ஓ‌விய‌ம் வரையு‌ங்க‌ள். உ‌ங்க‌ள் கை‌த் ‌திறமைகளை வெ‌ளி‌ப்படு‌த்து‌ங்க‌ள்.

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments