Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌கெ‌ட்டவ‌ர் சகவாச‌ம் கெ‌ட்ட‌தி‌ல் முடியு‌ம்

Webdunia
ஓநாய் ஒன்று காடெல்லாம் இரை தேடி ஒன்றும் கிடைக்காமல் மரத்தடி ஒன்றில் படுத்திருந்தது.

அந்த சமயத்தில் அப்பகுதியில் கிழுங்கு ஒன்றை தோன்றி எடுத்து சாப்பிட்டுவிட்டு வந்து கொண்டிருந்தது முள்ளம்பன்றி.

ஓநாய்க்கு முள்ளம்பன்றியைப் பார்த்துவிட்டதும் ஒரே குஷிதான். இன்றைக்கு நல்ல வேட்டை என்று நினைத்தபடி சதிதிட்டம் தீட்டியது.

அதன்படி, முள்ளம்பன்றியின் அருகில் சென்ற ஓநாய், தம்பி முள்ளம்பன்றியே.. நீ ரொம்ப அழக இருக்கிறாய் என்றது.

அந்த வார்த்தையில் மயங்கிய முள்ளம்பன்றி, அப்படியா அண்ணா என்றது.

ஆம், உன் அழகை வார்த்தையால் வர்ணிக்க முடியவில்லை. ஆனால் ஒரே ஒரு குறை, உனது முட்கள்தான். இவற்றை வெட்டிவிட்டால் நீ மிகுந்த அழகுடன் இருப்பாய் என்றது.

இதை நம்பிய முள்ளம் பன்றியும் தனது கூட்டத்தாரிடம் அறிவித்துவிட்டு, தனது முட்களை வெட்டிக் கொண்டது.

அப்படியே ஓநாயை சந்தித்தது. அப்போது ஓநாய் மிகுந்த மகிழ்ச்சியுடன், தம்பி இப்போ நீ ரொம்ப அழகா இருக்கே என்று புகழாராம் சூட்டியவாறு தனது இரையாக்கிக் கொள்ளும் ஆசையை கண்களில் வெளிப்படுத்தியது.

உன்னைப் பார்க்கும்போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. உனது அழகைப் பார்த்து அல்ல, உன்னை ருசிப்பதை நினைத்து என்று சொன்னவாரே முள்ளம்பன்றியை ஒரே கடி கடித்து மாய்த்துவிட்டது.

பின்னர் தங்கள் இனத்துடன் முள்ளம்பன்றிக் கறி சாப்பிட்டு மகிழ்ந்தது.

அதே சமயம், தங்களது சக நண்பன் ஒருவன், இப்படி தீயோர் வலையில் விழுந்து உயிர் விட்டதை எண்ணி துயரமுற்றன முள்ளம்பன்றிகள்.

எனவே எதையும் சிந்தித்து செயல்பட வேண்டும். தீயோர் சொல்லைக் கேட்கக் கூடாது.

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments