Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐன்ஸ்டீனின் அடக்கமான பதில்

ஐன்ஸ்டீனின் அடக்கமான பதில்
, வெள்ளி, 20 மார்ச் 2009 (12:38 IST)
பிரபல அணு விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மிகப்பெரிய மேதை. இஸ்ரேல் 1952ஆம் ஆண்டு அவருக்கு ஜனாதிபதி பதவி கொடுக்க முன் வந்த போதும், அவர் எனக்கு பதவிகள் முக்கியமல்ல, சமன்பாடுகள்தான் முக்கியமானவை என்று கூறி பதவியை அடக்கத்தோடு மறுத்தார்.

ஐன்ஸ்டீன் எப்போதும் அமைதி விரும்பியாகவே இருந்தால்.
ஆனாலும், பிரபலமாகவும், மேதையாகவும் இருந்தால் எல்லோருக்குமே எதிர்ப்புகள் அதிகமாகும். அதுபோலவே ஐன்ஸ்டீனுக்கு எதிராக ஒரு சங்கமே உருவாக்கப்பட்டது.

அந்த சங்கம் சார்பில் ஐன்ஸ்டீனுக்கு எதிராக 100 நூலாசிரியர்கள் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.

அதற்கு அடக்கமாக விளக்கம் அளித்த ஐன்ஸ்டீன், நான் தவறு செய்திருந்தால் அதனை நிரூபிக்க நூறு பேர் தேவையில்லை. ஒருவர் போதுமே என்றார்.

எனவே குழந்தைகளே, எந்த நேரத்திலும் பொறுமை இழக்காமல், அறிவுக்கு வேலை கொடுத்து அடக்கமாக இருந்து பாருங்கள். உலகம் உங்கள் காலடியில். அப்போதும் நீங்கள் அடக்கமாகவே இருக்க வேண்டும்.

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும் என்பது வள்ளுவன் வாக்கு.

Share this Story:

Follow Webdunia tamil