Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அட‌க்‌க‌த்‌தி‌ல் உ‌ய‌ர்‌ந்தவ‌ர்க‌ள்

Webdunia
வெள்ளி, 12 ஜூன் 2009 (12:36 IST)
அ‌தி க ‌ திறமையு‌ம ், ஆ‌ற்றலு‌ம ் கொ‌ண்டவ‌ர ் அட‌க்க‌த்துட‌ன ் வா‌ழ்வதையு‌ம ், ஒ‌ன்று‌ம ் தெ‌ரியாதவ‌‌ர்க‌ள ் தலை‌‌க்கண‌த்துட‌ன ் ‌ தி‌ரிவதையு‌ம ் நா‌ம ் பா‌ர்‌த்து‌ள்ளோ‌ம ். அத‌ற்க ு அ‌‌த்தா‌ட்‌சியா ன ஒர ு கத ை ‌ இ‌ங்க ே..

Puthinam PhotoWD
கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது.

ஒரு குறுகலான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்தது.

யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டது. அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், "பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்து வ‌ழி விட்டது!" என்று சொல்லிச் சிரித்தது.

அ‌‌ப்போது அந்த யானையுட‌ன் வ‌ந்து கொ‌ண்டிரு‌ந்த ம‌ற்றொரு யானை இ‌ந்த யானையை‌ப் பா‌ர்‌த்து, "அப்படியா, நீ பயந்து விட்டாயா?" என்று கேட்டது.

அதற்குக் கோவில் யானை கீழ்க்கண்டவாறு பதில் சொன்னது:
" நான் இடறி ப‌ன்‌றி ‌மீது ‌விழு‌ந்து‌வி‌ட்டா‌ல் பன்றி நசுங்கி விடும். அ‌ தி‌ல்லாம‌ல் அது வாலை ஆ‌ட்டி‌க் கொ‌ண்டு வரு‌கிறது. நானோ சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழுந்தா‌ல் நானும் அசுத்தமாகி விடுவேன். இந்தக் காரணங்களால், நான் ஒதுங்கிக் கொண்டேன்."

நீதி : தன் பலம், பலவீனம் தெரிந்தவர்கள் அடக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.

குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகளின் பாக்கெட் மணியை சேமிப்பாக மாற்றுவது எப்படி?

குழந்தைகளிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்த பெற்றோர்கள் செய்ய வேண்டியவை...

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் இறந்துள்ள பெரும் உயிரினங்கள், விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வைரம் இப்படிதான் கிடைக்கிறது

Show comments