Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்ப்ப காலத்தில் ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுகள் எவை தெரியுமா...?

Webdunia
கர்ப்பிணி பெண்கள் எப்போதும் ஒரு உணவை சாப்பிட்டு, அதை தன் உடல் ஏற்றுக்கொள்ளாவிட்டால் உடனடியாக தவிர்த்துவிட வேண்டியது  நல்லது. ஆம், ஒரு சில உணவை நாம் வழக்கமான நாளில் எடுத்துக்கொண்டாலும், கர்ப்ப காலத்தில் தேவையற்ற ஒவ்வாமை பிரச்சனையை  அது ஏற்படுத்த அதிக வாய்ப்பிருக்கிறது.
சோயா, கோதுமை, பசு பால், முட்டை, வேர்க்கடலை, பாதாம், அக்ரூட் பருப்புகள், மீன் போன்றவை ஒருமுறை அலெர்ஜி ஏற்படுத்தும்போது மீண்டும் உண்ண முயலாதீர்கள். ஆனால் ஒரு சில ஆய்வின் முடிவுப்படி தெரியவருவது என்னவென்றால், அலெர்ஜி அற்ற உணவை நீங்கள்  கர்ப்ப காலத்தில் எடுத்துக்கொள்வதால் உங்களுக்கும், உங்கள் கருவில் வளரும் குழந்தைக்கும் மிகவும் நல்லது.
 
கர்ப்ப காலத்தில் எந்த வகையான உணவுகள் என்ன பலனை தருகிறது? நச்சுக்கள் அடங்கிய உணவுகள் எவை? அவற்றை நாம் எவ்வளவு  சாப்பிடுவதன் மூலம் உங்களுக்கும், உங்கள் கருவிலிருக்கும் குழந்தைக்கும் மிகவும் நல்லது போன்ற பல விஷயங்களை பற்றி அறிவது  அவசியம். இயற்கையை பாட்டிலிலும், பிளாஸ்டிக் கவரிலும் அடைத்து வைத்து பதப்படுத்தப்பட்ட உணவை உண்ணுவதில் எந்த வித  பயனுமில்லை. 
 
கர்ப்பிணிகளுக்குப் பால் அவசியமானது. கால்சியம் பற்றாக்குறையைச் சரிசெய்ய எல்லாருக்கும் பால் குடிக்கச் சொல்லி பரிந்துரைப்பார்கள் மருத்துவர்கள்.  பதப்படுத்தப்படாத பால் மற்றும் பால் பொருட்களை உபயோகிப்பது கிருமித் தொற்றுகளுக்கும் அவை ஏற்படுத்துகிற  நோய்களுக்கும் வழிவகுக்கும். பாலை எப்போதும் நன்றாகக் காய்ச்சியே குடிக்க வேண்டும்.
 
கர்ப்ப காலத்தில் சீஸை தவிர்ப்பதே சிறந்தது. அதிலும் மிகவும் மென்மையான சீஸ் வகைகளில் பாக்டீரியாக்கள் அதிகமிருக்கும். அவை கருவின் வளர்ச்சியைப் பாதிக்கக்கூடியவை.
 
வெளியிடங்களில் அசைவம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது கர்ப்பிணிகளுக்குப் பாதுகாப்பானது. வீட்டில் செய்கிற போதும் முழுமையாக சமைக்கப்பட்டவையா எனப் பார்த்து சாப்பிட வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவக் குணங்கள் நிறைந்த நாவல் மரம்: ஒரு முழுமையான பார்வை

சுவாசம் பிரச்சனை, ஆஸ்துமா பிரச்சனையா? சித்த மருத்துவத்தில் உள்ள தீர்வுகள்!

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இரவு உணவை எப்போது எடுக்க வேண்டும்?

IIRSI 2025 மாநாடு: மொரிஷியஸ் அமைச்சர் அனில் குமார் பச்சூ, தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தனர்!

மாதுளை தோலின் மகத்துவங்கள்: தூக்கி எறியும் முன் யோசியுங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments