Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே கற்றுக்கொடுக்க வேண்டியவைகள்

பெண் குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே கற்றுக்கொடுக்க வேண்டியவைகள்

Webdunia
குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடுவதை தவிர்க்க வேண்டும். உங்கள் குழந்தையின் தனித்துவத்துத்தை அல்லது தனித்திறமையைப் புரிந்து கொள்ளச் முயற்சி செய்யுங்கள். சிறு செயல்களை கூட பாராட்ட மறவாதீர்கள்.


 
 
பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.
 
இரண்டு முதல் மூன்று வயதுக்கு மேல் ஆன குழந்தைகள் முன்னிலையில் உடை மாற்றிக் கொள்ளுவதைத் தவிர்க்க வேண்டும்.
 
குழந்தைகளுக்கு யாரும் இது உன்னுடைய கணவன் என்றும், வருங்காலத்தில் இவரைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றோ குறிப்பிடுவது, மனதில் பதிய வைப்பது தவறு.
 
குழந்தை விளையாடப் போகும்போது உங்கள் பார்வை அவர்கள் மீது இருந்து கொண்டே இருக்கட்டும். மேலும் அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் குழந்தைகள் தங்களுக்குள்ளாகவே பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடும்.
 
வளரும் பருவத்திலேயே உடலுறவு மற்றும் அதன் நன்மதிப்பீடுகளை பக்குவமாக கற்பியுங்கள்.
 
குழந்தைகளுக்கு சொன்னால் புரியாது என்னும் மனோபாவத்தை தவிர்த்து, சிறுவயது முதலே நல்ல பழக்கங்களை பழக்கவேண்டியது நம்முடைய கடமையாகும்.
 
தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் இணையதளங்களில் குழந்தைகள் பார்க்க அவசியமற்ற சேனல்களை பேரண்டல் கன்ட்ரோல் மூலம் செயலிழக்கச் செய்துவிட்டோமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. மேலும், குழந்தைகள் அடிக்கடி செல்லும் நம் நண்பர்களின் வீடுகளிலும் இதை செய்து வைக்க அறிவுருத்துவது நல்லது.
 
மூன்று வயது ஆனவுடனேயே குழந்தைகளுக்கு தங்கள் உடலின் அந்தரங்கப் பகுதிகளை சுத்தம் செய்ய கற்றுக் கொடுக்க வேண்டும். உடலின் அந்தப் பகுதிகளை பிறர் யாரும் தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என எச்சரிக்கை செய்து வைக்க வேண்டும். நீங்களும் அந்த வேலையை செய்யக் கூடாது. ஏனென்றால், அவசியமற்ற உதவிகளை செய்யும் போக்கு வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது.
 
குழந்தையை அச்சுறுத்தக் கூடிய அல்லது அவர்களின் மனநிலையை பாதிக்கக் கூடியவற்றை முற்றாகத் தவிர்க்கவும். இதில் இசை, படங்கள், நண்பர்கள் மற்றும் குடும்பங்களும் அடங்கும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தக்காளியில் இருக்கும் வைட்டமின் சத்துக்கள் என்னென்ன?

முழங்கால் செயற்கை தசைநார் சிகிச்சை! தமிழகத்தில் முதலிடம்! – ரெலா மருத்துவமனை!

சோம்பை உணவில் சேர்த்து கொள்வதால் ஏற்படும் பயன்கள்..!

பிரைடு ரைஸ் சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு ஏற்படும் தீங்குகள்..!

உடலுக்கு தேவையான புரதச் சத்துக்கள் உணவுகள் என்னென்ன?