Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புட்டிப்பால் உணவு

புட்டிப்பால் உணவு

Webdunia

தாய்ப்பால் குறையும்பொழுது குழந்தைக்குப் புட்டிப்பால் தொடங்கப்படுகிறது. குழந்தை பசிக்காக அழும்போது பால் புட்டியை வாயில் வைத்தவுடனே வெளியே தள்ளி விடுகிறது. ஏனெனில் ரப்பர் துவாரம் சரியாக இல்லாமல் இருக்கலாம் அல்லது பால் புளிப்பாகவோ, சூடாகவோ, அல்லது குளிர்ச்சியாகவோ, இனிப்பாகவோ இருக்கலாம்.

புட்டிப்பால் கொடுக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை :

பால் புட்டிகள் மற்றும் இளம் குழந்தைகளுக்கு வேண்டிய உணவு ஊட்ட உபயோகிக்கும் பாத்திரங்களை சுத்தமாக வைத்து இருத்தல் அவசியம்.

பால் பாட்டில் கறையின்றி முதலில் சுத்தமாகப் பிரஷின் உதவியினால் கழுவ வேண்டும். நாற்றம் இருத்தல் கூடாது.

மிதமான சுடுநீரில் மீண்டும் ஒருமுறை பிரஷின் துணை கொண்டு கழுவப்பட வேண்டும்.

பாத்திரத்தில் போதுமான அளவு நீரை எடுத்துக் கொண்டு குப்பிகள் தவிர மற்றவற்றை எல்லாம் போட்டு அடுப்பில் வைக்க வேண்டும்.

நீர் கொதி வந்து 5 நிமிடங்கள் வரை வைக்க வேண்டும். இறுதியாக குப்பியைப் போட வேண்டும். 2 நிமிடங்கள் கழித்து எடுக்க வேண்டும். கூடுமான வரையில் கையால் தொடாமல் எடுக்க வேண்டும்.

காற்றுப் புகாமல் வேறொரு பாத்திரத்தில் வைத்து மூடி வைக்க வேண்டும். பயன்படுத்தப்படும் பால் பாட்டில்கள், டம்ளர், தட்டு முதலியவற்றின் சுத்தம் குழந்தைகளின் ஆரோக்கியத்தைக் காக்கும். தூய்மையாக்கப்பட வேண்டிய பொருட்களை முதலில் குளிர்ந்த நீரில் நன்கு அலச வேண்டும்.

பால் பாட்டில் துவாரம் மிகப் பெரியதாகவோ அல்லது மிகச் சிறியதாகவோ இல்லாமல் சரியாக இருக்க வேண்டும். ரப்பரில் துவாரம் பெரியதாக இருந்தால் தாய் பாட்டிலை மட்டமாகப் பிடிப்பதால் நிறைய காற்று உள்ளே சென்று குடல் தசைகளை நீளச் செய்கிறது. எனவே குழந்தை உணவை வாந்தி செய்து விடுகிறது. ஆகவே ரப்பரில் துவாரம் சிறியதாகவும் அமுக்கினால் பால் அளவு மெல்லியதாக வருமாறும் இருத்தல் வேண்டும்.

பால் பாட்டிலை சாய்ந்த நிலையில் பிடிக்க வேண்டும். அப்போதுதான் ரப்பர் முழுவதும் பால் நிரம்பி இருக்கும். இது அதிகப்படியான காற்று உட்கொள்வதைத் தவிர்க்கிறது.

புட்டிப்பால் தருவதால் ஏற்படும் விளைவுகள்:-

புட்டிப் பாலுணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு தொற்று நோய்கள் வர அதிக வாய்ப்புள்ளது.

பெரும்பான்மையான குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டு உணவுச் சத்துக் குறைவு ஏற்படுகிறது.

பாலின் திரவ அளவு அதிகரிக்கச் செய்வதாலும் அளவை குறைக்கச் செய்வதாலும் மீண்டும் குழந்தை பாதிக்கப்படுகின்றது.

ஆகவே தாய்ப்பால்தான் குழந்தைகளுக்கு மிகவும் சிறந்தது. சரியான காரணம் இல்லாமல் தாய்ப்பாலை நிறுத்திவிட்டு புட்டிப்பால் தருவது நல்லதல்ல.


Share this Story:

Follow Webdunia tamil