ரயில்வே பட்ஜெட் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் : சுரேஷ் பிரபு

ரயில்வே பட்ஜெட் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும்

Webdunia
புதன், 24 பிப்ரவரி 2016 (20:39 IST)
நாளை ரயில்வே பட்ஜெட் (2016-17) தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அந்த பட்ஜெட் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
மத்திய அரசு சார்பாக ரயில்வே மந்திரி சுரேஷ் பிரபு நாளை 2016-17 ஆம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அமைச்சராக பொறுப்பேற்ற பின், அவர் இரண்டாவது முறையாக தாக்கல் செய்யும் பட்ஜெட் இதுவாகும்.
 
இதுபற்றி கருத்து தெரிவித்த சுரேஷ் பிரபு “ரயில்வே பட்ஜெட், நாட்டு நலனையும், ரயில்வே துறையின் நலனையும் கருத்தில் கொண்டு  தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும். பட்ஜெட்டை இறுதி செய்வதற்கு  அடிப்படை உண்மை நிலவரத்தை கணக்கில் எடுத்துக்கொண்டோம்.
 
கட்டண  உயர்வு இல்லாமல், விளம்பரங்கள், வணிகமயமாக்குதல், உபரி நிலம் ஆகியவை மூலம் ரயில்வே துறையின் வருவாயை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்” என்று கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்று ஜெயலலிதா முன் கைகட்டி நின்னவர்தான் விஜய்! ‘ஜனநாயகன் பிரச்சினை குறித்து சரத்குமார் காட்டம்

நாளை முதல் 2 நாட்களுக்கு எங்கெல்லாம் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்.!

உங்க கனவ சொல்லுங்க, அதை திட்டமாக திராவிட மாடல் ஆட்சி மாற்றும்: முதல்வர் ஸ்டாலின்

2026 தேர்தல் முடிவு தொங்கு சட்டமன்றம் தான்.. அடித்து கூறும் அரசியல் விமர்சகர்கள்..!

சென்னையில் நாளை பள்ளிகள் செயல்படும்.. முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு

Show comments