Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2016-17 ரயில்வே பட்ஜெட்: தமிழர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

Webdunia
புதன், 24 பிப்ரவரி 2016 (18:06 IST)
ரயில்வே துறையால் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் தமிழகத்தில் நிலுவையில். இதில் முப்பதுக்கும் மேற்பட்ட ரயில் பாதை அமைக்கும் பணிகள் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கப்படாமல் நிலுவையில் இருப்பதாக மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

 
ஒவ்வொரு முறையும் ரயிவ்வே பட்ஜெட் அறிவிக்கப்படும் போது தமிழ்நாட்டு மட்டும் மத்திய அரசு நிரகரிக்கப்பட்டு வருகிறது. கடந்த பட்ஜெட்டில் தமிழகதை மறந்துவிடும் வகையில், ஒரு புதிய ரயில்கூட அறிவிக்கப்படவில்லை. இதனால், நாளை நாடாளுமன்றத்தில்  ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யும் போதும் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமா என்ற கேள்வியுடன் தமிழர்கள் காத்திருக்கின்றனர். 
 
இந்நிலையில், இந்த முறை ரயில்வே பட்ஜெட் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டும் என்றும் சென்னை - கன்னியாகுமரி இடையே ரயில் பாதை பணியை விரைந்து முடிக்க, இந்த முறை ரயில்வே பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும்  மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார்
 
நாளை தாக்கல் செய்ய உள்ள ரயில்வே பட்ஜெட் குறித்து முன்னாள் மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு தனியார் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில், தமிழகத்தில் பல்வேறு ரயில்வே திட்டங்கள் நிலுவையில் இருக்கிறது. மேலும், 10 ஆண்டுகளுக்கு முன்னரே நாங்கள் அறிவித்த திட்டங்களுக்கு இன்னும்கூட நிதி ஒதுக்கப்படாவில்லை. 
 
பாஜக, ரயில்தமிழகத்துக்கு அறிவிக்கப் பட்ட பல்வேறு புதிய வழித்தடங்களுக்கான ரயில் பாதை அமைப்பு, மீட்டர்கேஜ் பாதைகளை அகல பாதைகளாக மாற்றுதல், இரட்டை ரயில் பாதை திட்டங்கள் என அனைத்து திட்டங்களும் நிலுவையில்தான் உள்ளன. இதற்கு காரணம், தமிழக அரசின் அலட்சியத்தாலும், பிடிவாதமும் தான் என்று அவர் குற்றம்சாட்டினார்.
 
முக்கியமாக திண்டுக்கல் முதல் குமுளி, நீடாமங்கலம் முதல் பட்டுக்கோட்டை வரை இருக்கும் மீட்டர்கேஜ் பாதைகளை அகல பாதைகளாக மாற்றுதல், தஞ்சாவூர் முதல் அரியலூர், மொரப்பூர் முதல் தர்மபுரி, திருவண்ணாமலை முதல் ஜோலார்பேட்டை வரை அறிவிக்கப்பட்ட திட்டங்களும் இன்றும் நிறைவேற்றப்படாமல்தான் உள்ளது அவர் தெரிவித்தார்.
 
சென்னை - கன்னியாகுமரி இடையே அதிவேக ரயில் சேவைக்கு ரயில்வே துறையுடன் கைகோர்த்து செயல்பட தமிழக அரசு முன்வந்துள்ளது என்று அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து, கட்டமைப்பை உருவாக்க, சென்னை - கன்னியாகுமரி இடையே மீதமிருக்கும் இரட்டை ரயில் பாதை பணியை விரைந்து முடிக்க இந்த முறை ரயில்வே பட்ஜெட்டிலில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று மத்திய அரசு தரப்பிலிருந்து தகவலி வெளியாகியுள்ளது
 
ஆனால், தமிழகத்தில் ஏற்கெனவே, ரயில்வே துறையால் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் நிலுவையில் இருக்கின்றன. முப்பதுக்கும் மேற்பட்ட ரயில் பாதை அமைக்கும் பணிகள் ஒவ்வொரு  பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கப்படாமல் நிலுவையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
மத்திய அரசு இதுவரை தமிழகத்துக்கு அறிவித்த பல்வேறு புதிய வழித்தடங்களுக்கான ரயில் பாதை அமைப்பு, இரட்டை ரயில் பாதை திட்டங்கள் உட்பட பல்வேறு திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் பணப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி தமிழக்திற்கு நிதி ஒதுக்கப்பட வில்லை.

இந்நிலையில்,  மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, தமிழக ரயில் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் தெரிவித்திருப்பது இந்த முறை ரயில்வே பட்ஜெடை தமிழர்களின் எதிர்ப்பார்ப்பை மேலும் அதிகரிக்க செய்துள்ளது
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாஸ் ஏஞ்சல் காட்டுத்தீயை அணைக்க கனடா உதவி.. விரைந்தது விமானப்படை..!

ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை சமமாக பாவிக்க வேண்டும்.. தமிழக போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுரை..!

டெல்லியில் 60,000 வாக்காளர்கள் மாயம்! ஆம் ஆத்மி அரசு மீது பா.ஜ. கபகீர் குற்றச்சாட்டு

மாதக்கணக்கில் நடக்கும் போராட்டம்.. விஷம் குடித்து தற்கொலை செய்த விவசாயி..!

மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வருவது எப்போது? அமைச்சர் செந்தில் பாலாஜி

Show comments