Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்ஜெட் 2016-2017: சில முக்கிய தகவல்கள்

பட்ஜெட் 2016-2017: சில முக்கிய தகவல்கள்

Webdunia
திங்கள், 29 பிப்ரவரி 2016 (14:54 IST)
2016-2017 ஆம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் அருண் ஜெட்லி தெரிவித்த சில முக்கிய அறிவிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


 
 
* தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின்கீழ் முதியோர்களுக்கு ரூ. 1000 கோடி ஒதுக்கீடு.
 
* பொதுமக்கள் பணம் எந்த கசிவு இல்லாமல் ஏழை மற்றும் தகுதியுடைய சென்று அடைய வேண்டும்.
 
* உயர்கல்வி நிதியுதவி வழங்க தனி அமைப்பு ஏற்படுத்தப்படும்.
 
* பருப்பு வகைகளை சந்தையில் உறுதிப்படுத்துவதற்காக 900 கோடி நிதி ஒதுக்கப்படும்.
 
* சமூக பாதுகாப்பு திட்டங்களுடன் ஆதார் எண் இணைக்கப்படும்.
 
* தொழில் தொடங்க ஏதுவாக, கம்பெனிகள் சட்டம் எளிமையாக்கப்படும்.
 
* ஏழைகள் நலனுக்காக மாவட்டத் தலைமை மருத்துவமனைகளில் டயாலிசிஸ் வசதி.
 
* டயாலிசிஸ் இயந்திரங்களுக்கான உற்பத்தி வரி நீக்கப்படும்.
 
* வருமான வரி கழிவு 2ஆயிரம் ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாயாக அதிகரிப்பு.
 
* வாடகை வருமானம் பெறாத சொந்த வீட்டிற்கான வரிச்சலுகை அதிகரிப்பு.
 
* 7 வது சம்பள கமிஷன் பரிந்துரைகளை செயல்படுத்த தேவையான இடைக்கால ஏற்பாடுகள் செய்யப்படும்.
 
* வரி வசூலிப்பை எளிமையாக்க அரசு நடவடிக்கை.
 
* கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சிகளுக்கு சிறப்பு காப்புரிமைக்கு ஆலோசனையளிக்கப்படும்.
 
* வருமான வரி விகிதங்களில் மாற்றம் ஏதும் இல்லை.
 
* 35 லட்சம் ரூபாய்க்கு உட்பட்ட வீட்டுக்கடன் வட்டிக்கு 50 ஆயிரம் ரூபாய் வரிச்சலுகை.
 
* மேக் இன் திட்டத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில் சுங்கம், கலால் வரியில் மாற்றம் கொண்டு வரப்படும்.
 
* 90% உள்நாட்டு தேன் ஏற்றுமதி செய்யப்படும்.
 
* 60 சதுர மீட்டருக்குள் கட்டப்படும் குறைந்த அளவிலான வீடுகளுக்கு வரிச்சலுக்கை அளிக்கப்படும்.
 
* முதல் முறையாக ரூ. 50 லட்சத்திற்குள் வீடு வாங்குவோருக்கு ரூ. 50 ஆயிரம் ரூபாய் கூடுதல் வரி விதிக்கப்படும்.
 
* காற்று மாசு குறைக்கும் வகையில் சிறிய கார்கள் மீது 2% வரி குறைக்கப்படும்.
 
* நிலக்கரி மீதான பசுமை எரிசக்தி வரி டன்னுக்கு ரூ, 200 இல் இருந்து ரூ. 400ஆக உயர்வு.
 
* ஏற்றுமதி துறைக்கு அரசு முழு ஆதரவு அளிக்கும்.
 
* தொழில் தொடங்குவதை எளிதாக்கும் வகையில் புதிய கம்பெணி சட்டம் கொண்டுவரப்படும்.
 
* தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து திரும்பப் பெறப்படும் 40% தொகைக்கு வரி விலக்கு.
 
* கணக்கில் காட்டப்படாத கருப்புப் பணத்திற்கு 45% வரி விதிக்கப்படும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? கவலை வேண்டாம்! 14,104 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு!

இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி வைரஸ் பரவியது: ஐ.சி.எம்.ஆர் உறுதி..!

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஏன் வெளியேறினார்? சபாநாயகர் அப்பாவு விளக்கம்..!

48 வருஷத்துல இப்படி நடந்தது இல்ல.. சீமான் கண்ணியம் தவறிவிட்டார்! - பபாசி தலைவர் கருத்து!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: கைதான 18 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து..!

Show comments