Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எப்பய்யா அத நிறுத்துவீங்க… கடுப்பேத்தும் அனபெல் சேதுபதி டிரைலர்!

Webdunia
செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (09:50 IST)
கொரோனா முதல் லாக்டவுனுக்குப் பிறகு விஜய் சேதுபதி, யோகி பாபு மற்றும் டாப்ஸி ஆகியோர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் நடந்தது. இந்த படத்தின் பெயர் அனபெல் சுப்ரமண்யம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது அனபெல் சேதுபதி என மாற்றப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போதோ முடிந்து விட்ட நிலையில் ரிலிஸாகாமல் முடங்கிக் கிடந்தது. இந்நிலையில் இப்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று அந்த படத்தின் டிரைலர் வெளியானது.

இந்த டிரைலரில் டாப்ஸி யோகி பாபுவை பன்னு மூஞ்சு வாயன் என சொல்வது போல காட்சிகள் அமைந்துள்ளன. யோகி பாபுவின் நகைச்சுவைகளில் தொடர்ந்து அவரின் உருவம் கேலி செய்யப்படுகிறது. அதை அவரும் அனுமதிக்கிறார். இருந்தாலும் இதை எப்போதுதான் நிறுத்துவார்கள் என்று எரிச்சலாக வருவதாக ரசிகர்கள் ஆத்திரமடைந்துள்ளனர். முதல் முதலாக யாமிருக்க பயமே என்ற படத்தில் யோகி பாபுவை அந்த வசனத்தின் மூலம் கேலி செய்ய ஆரம்பித்தனர். அதில் இருந்து பல்வேறு படங்களில் அதே வசனம் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இனி திரைப்படங்கள் தயாரிக்கப் போவதில்லை என இயக்குநர் வெற்றிமாறன் அறிவிப்பு

கிளாமர் கேர்ள் யாஷிகாவின் ரீசண்ட் புகைப்படத் தொகுப்பு!

ஹோம்லி லுக்கில் க்யூட்டாக ஜொலிக்கும் மாளவிகா மோகனன்!

பாட்டு நல்லா இல்லைன்னு சொன்னதும் கேப்டன் ஷாக் ஆகிட்டாரு… ’ஆட்டமா தேரோட்டமா’ சீக்ரெட்டைப் பகிர்ந்த செல்வமணி!

பிரபாஸின் ‘ஸ்பிரிட்’ படத்தில் இணையும் சிரஞ்சீவி…!

அடுத்த கட்டுரையில்
Show comments