Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.2500ல் இருந்து ரூ.25 கோடிக்கு மாறிய தல அஜித்! ஆனாலும் அதே நட்பு

Webdunia
ஞாயிறு, 19 மார்ச் 2017 (22:48 IST)
தல அஜித் நடிக்கும் படத்திற்காக அவருக்கு தற்போது ரூ.25 கோடி சம்பளமாக கொடுக்கப்படுகிறதாம். அவரது கால்ஷீட் கிடைத்தால் இன்னும் அதிகமாகக்கூட கொடுக்க பல தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கின்றனர்.




 




இந்நிலையில் அஜித் தனது ஆரம்பகால கட்டத்தில் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்து இயக்குனரும் நடிகை ரேவதியின் முன்னாள் கணவருமான சுரேஷ்மேனன் தனது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். அவர் தனது ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது: 1993-ஆம் ஆண்டு, நான் இயக்கிய பாசமலர்கள் படத்தில் அஜித் ஒரு நிமிடம் வந்து போகக் கூடிய ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்போது இருப்பது போலவே, இப்போதும் அதே கவர்ச்சியோடும், நட்புணர்வோடும் அஜித் இருக்கிறார். இன்று அவரது சம்பளம் 25 கோடியாக இருக்கிறது. ஆனால் அந்த ஒரு நிமிட காட்சிக்காக அவர் வெறும் 2500 ரூபாய் மட்டுமே சம்பளமாக வாங்கினார்.” என சுரேஷ் மேனன் தெரிவித்துள்ளார்.

ரூ,.2500 சம்பளம் வாங்கியபோது இருந்த அதே நட்புணர்வு ரூ.25 கோடி வாங்கும்போதிலும் இருக்கின்றது என்பது சாதாரண விஷயமில்லை என்று அஜித் ரசிகர்கள் இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பெருமையாக பதிவு செய்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

குட் பேட் அக்லி பெரிய வசூல் பண்ணாலும் தயாரிப்பாளருக்கு நஷ்டம்தான் – பிரபலம் கருத்து!

விஜய் சேதுபதியின் அடுத்த பட நாயகி தபு அல்ல, கபாலி நாயகி தான்.. சூப்பர் தகவல்..!

குக் வித் கோமாளி 6வது சீசனின் புரமோ வீடியோ.. ஒளிபரப்பாவது எப்போது?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தம்பதிகள் ஆகும் முதல் ஜோடி.. அமீர் - பாவனி திருமண நாள் அறிவிப்பு..!

அனுபமா பரமேஸ்வரனின் கார்ஜியஸ் புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments