Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலியானா என்ன பெரிய நடிகையா - கொந்தளிக்கும் தயாரிப்பாளர்

Webdunia
புதன், 24 ஆகஸ்ட் 2016 (16:05 IST)
இலியானா ஏற்படுத்தியிருக்கும் சலசலப்பை நமட்டு சிரிப்புடன் கவனித்து வருகிறது பாலிவுட். போனா போகுது என்பது போலத்தான் இலியானாவுக்கு இந்தியில் வாய்ப்புகள் கிடைக்கின்றன. அவர் நடித்தால் நாலு பேர் பார்ப்பார்கள் என்கிற நிலையும் இல்லை.


 


இந்நிலையில், ஆன்கீன் படத்தின் இரண்டாம் பாகத்தில் அமிதாப், ரெஜினாவுடன் இலியானாவும் நடிப்பதாக அறிவிப்பு வந்தது. ஒரு சின்ன தவறு. அதற்கு வானத்துக்கும் பூமிக்கும் தேவையில்லாமல் குதித்துக் கொண்டிருக்கிறார் இலியானா. என்னுடைய அனுமதி இல்லாமல் அந்தப் படத்தில் நடிப்பதாக எப்படி செய்தி போடலாம். தயாரிப்பாளர் மீது வழக்குப் போடுவேன் என்கிறார் அர்த்தமில்லாமல்.
 
சரி, தயாரிப்பாளர் கவுரங் தோஷி என்ன சொல்கிறார்?
 
இலியானாவை சந்தித்து படத்தின் கதாசிரியரும், நானும் கதை சொன்னோம். நல்ல கதை, நடிக்கிறேன் என்று அப்போது சொன்னவர் இப்போது மாற்றி சொல்கிறார். இவர் என்ன அவ்வளவு பெரிய நடிகையா? தீபிகாவா இல்லை கத்ரினாவா? இவரைவிட ஒரு பெரிய நடிகையை என் படத்தில் ஒப்பந்தம் செய்வேன். என்னுடைய படத்துக்கு அமிதாப் இருப்பதைவிட வேறு என்ன வேண்டும் என்று விளாசித்தள்ளியிருக்கிறார்.
 
இலியானாவுக்கு இது தேவையா?

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments