Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனல் தெறிக்கும் ஹ்ரித்திக் ரோஷன்: பட்டையை கிளப்பும் டைகர் ஷ்ராப்- வார் டீசர்

Webdunia
திங்கள், 15 ஜூலை 2019 (21:11 IST)
ஹ்ரித்திக் ரோஷன், டைகர் ஷ்ராப் இணைந்து நடிக்கும் “வார்” திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது.

”பேங் பேங்” திரைப்பட இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன், டைகர் ஷ்ராப் இணைந்து நடித்திருக்கும் படம் “வார்”. ஹாலிவுட்டுக்கு நிகராக ஆக்‌ஷன் சண்டை காட்சிகளுடன் உருவாகி இருக்கும் இந்த படத்தை தயாரித்திருக்கிறார் யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஆதித்யா சோப்ரா.

இந்த படத்தின் டீசர் இன்று மாலை வெளியானது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஹ்ரித்திக் ரோஷன் நடிக்கும் ஆக்‌ஷன் படம் என்பதால் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதை பூர்த்தி செய்யும்படி படத்தின் டீசர் இருக்கிறது. பல நாடுகளில் ஆக்‌ஷன் காட்சிகளை எடுத்திருக்கிறார்கள். டீசர் ரிலீஸ் ஆன 3 மணி நேரத்திற்குள் 65 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை புரிந்திருக்கிறது. இந்த திரைப்படம் அக்டோபர் 2 அன்று திரைக்கு வர இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தேவதை வம்சம் நீயோ… திஷா பதானியின் கலர்ஃபுல் க்ளிக்ஸ்!

ரிலீஸுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பே 130 கோடி ரூபாய் சம்பாதித்த நோலனின் ‘ஒடிசி’!

பிரபாஸின் ‘ஸ்பிரிட்’ படத்துக்கு இசையமைக்கிறாரா அனிருத்?

நடிப்பு சலிப்பை ஏற்படுத்தினால் uber ஓட்டுனர் ஆகிவிடுவேன் – ஃபஹத் பாசில் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments