Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த்ரிஷ்யம் இந்தி ரீமேக்கில் விஷால் பரத்வாஜ், குல்ஸார்

Webdunia
செவ்வாய், 12 மே 2015 (14:11 IST)
மோகன்லால், மீனா நடித்த த்ரிஷ்யம் மலையாளப் படம் தெலுங்கு, கன்னடத்தில் ஏற்கனவே ரீமேக் செய்யப்பட்டு அங்கே வெற்றியும் பெற்றிருக்கிறது. தமிழ் ரீமேக் கமல் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் தயாராகி உள்ளது. ஜுலையில் படம் திரைக்கு வருகிறது.
 
த்ரிஷ்யத்தின் இந்தி ரீமேக் இந்த வருட இறுதியில் தொடங்குகிறது.
 
மோகன்லால் நடித்த வேடத்தில் அஜய்தேவ் கானும், மீனா நடித்த வேடத்தில் ஸ்ரேயாவும், ஆஷா சரத்தின் போலீஸ் அதிகாரி வேடத்தில் தபுவும் நடிக்கின்றனர்.
 
மராத்திப்பட இயக்குனர் நிஷிகாந்த் காமத் இந்த ரீமேக்கை இயக்குகிறார். இவர் டோம்பிவலி பாஸ்ட் என்ற தனது மராத்திப் படத்துக்காக தேசிய விருது வாங்கியவர். இந்தப் படம் மாதவன் நடிப்பில் எவனோ ஒருவன் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது.
 
இந்தி த்ரிஷ்யம் ரீமேக்கின் சுவாரஸிய திருப்பமாக இரு சாதனையாளர்கள் படத்தில் இணைந்திருக்கிறார்கள். இயக்குனரும், இசையமைப்பாளருமான விஷால் பரத்வாஜ் இந்தப் படத்துக்கு இசையமைக்க, பிரபல கவிஞர் குல்ஸார் பாடல்கள் எழுதுகிறார்.
 
இந்தப் படத்தில் நடிக்கும் அஜய்தேவ் கான், தபு, இசையமைப்பாளர் விஷால் பரத்வாஜ், பாடலாசிரியர் குல்ஸார், இயக்குனர் நிஷிகாந்த் காமத், எடிட்டர், ஒளிப்பதிவாளர் என அனைவரும் தேசிய விருது வாங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

Show comments