விமலும் வெப் சீரிஸ் பக்கம் ஒதுங்குகிறாரா?

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (08:23 IST)
நடிகர் விமல் நடிப்பில் ஒரு வெப் சீரிஸ் உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

களவாணி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான விமல் அதன் பின்னர் பல படங்களில் நடித்து தன்னை ஒரு திறமையான நடிகராக அடையாளம் காட்டிக்கொண்டார். ஆனால் கிராமத்து வேடம் பொருந்திய அளவுக்கு அவருக்கு நகரத்து இளைஞர் வேடம் பொருந்தவில்லை. அதுபோல அவர் நடித்த சில படங்கள் தோல்வியை தழுவியது. பின்னர் சொந்தப்படம் தயாரித்து கையை சுட்டுக்கொண்டார். இப்போது பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாத நிலையில் விமல் எப்படியும் ஒரு வெற்றிப்படம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

இந்நிலையில் அவர் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தயாரிக்கும் புதிய வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த தொடர் ஜி 5 தளத்தில் விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருண் விஜயின் 'ரெட்ட தல’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. நாளை ஒரு சர்ப்ரைஸ்..!

’கைதி 2’ படம் குறித்த எந்த அப்டேட்டும் எனக்கு தெரியாது.. கார்த்தி ஆதங்க பதில்..!

லைகாவின் ‘லாக்டவுன்’ திரைப்படம் மீண்டும் ஒத்திவைப்பு.. அனுபமா ரசிகர்கள் சோகம்..!

‘படையப்பா’ காமெடி மாதிரியே ரஜினி சட்டையை மாற்றி போட்ட நடிகர்! படப்பிடிப்பில் நடந்த சம்பவம்

அடுத்த கார் பந்தயத்திற்கு தயாரான அஜித் அணி.. அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments