Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரீரெட்டியை எல்லாம் பெரிய ஆளா ஆக்கிவிட்டுறாதீங்க! நடிகை திரிஷா அதிரடி

Webdunia
செவ்வாய், 24 ஜூலை 2018 (07:44 IST)
ஸ்ரீரெட்டி உங்களைப் பற்றியும் பேசியிருக்கிறாரே என்ற கேள்விக்கு நடிகை திரிஷா ஸ்ரீரெட்டியை எல்லாம் பெரிய ஆளா ஆக்கிவிட்டுறாதீங்க என்று பதிலளித்துள்ளார்.
முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், சுந்தர் சி. உள்ளிட்ட தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட பிரபலங்கள் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி சிலர் தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விட்டதாக நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறியுள்ளார். அதோடு, தொடர்ச்சியாக தொலைக்காட்சி பேட்டிகளில் பல பரபரப்பு தகவல்களை கூறி வருகிறார். 
 
மேலும் முன்னணி நடிகைகளான நயன்தாரா, திரிஷா, காஜல் அகர்வால் உள்ளிட்டோர் வாயைத் திறந்தால் பலரின் பெயர்கள் வெளியே வரும் என ஸ்ரீரெட்டி தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில் இதுகுறித்து நடிகை திரிஷாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இது குறித்து பேசிய அவர் மொதல்ல எனக்கு ஸ்ரீரெட்டின்னா யாருன்னே தெரியாது. தேவையில்லாம பேசி ஸ்ரீரெட்டிய பெரிய ஆளா ஆக்க வேண்டாம் என திரிஷா தெரிவித்தார்.
 
மூத்த நடிகைகள், மற்றும் வளர்ந்து வரும் நடிகைகள் என பலர் நாம் ஒழுங்காக இருந்தால் நம்மை யாரும் நெருங்க முடியது, ஒழுங்கான நபர்களுடன் பயணித்தால் இதுபோன்ற பிரச்சனை வராது என அவர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

போர் முடிந்துவிடும்.. ஆனால்..? பாலஸ்தீன கவிதையை ஷேர் செய்த நடிகை ஆண்ட்ரியா!

கெனிஷாவுடன் வந்த மோகன் ரவி! மனைவி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை! - குவியும் கண்டனங்கள்!

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

நீல நிற உடையில் பிரியா வாரியரின் அழகிய க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments