Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தபாங், சிங்கம் .... நானா படேகரின் லூஸ் டாக்

தபாங், சிங்கம் .... நானா படேகரின் லூஸ் டாக்
, வெள்ளி, 27 பிப்ரவரி 2015 (19:21 IST)
நானா படேகர் நடிப்பில் 2004 -இல் அப் தக் பச்சான் படம் வெளியானது. நானா படேகர் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக நடித்திருந்த அப்படம் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. படமும் நன்றாகப் போனது. 
 
11 வருடங்களுக்குப் பிறகு அப் தக் சப்பானின் இரண்டாம் பாகத்தை எடுத்தனர். இயக்குனர் வேறு ஒருவர். நடிப்பு அதே நானா படேகர். இன்று படம் வெளியாகியுள்ளது.
 
அப் தக் சப்பான் வெளியாவதை முன்னிட்டு தபாங், சிங்கம் படங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை நானா படேகர் வெளியிட்டார். தபாங், சிங்கம் போன்ற போலீஸ் கதையுள்ள படங்கள் ஆட்டம் பாட்டத்துக்குதான் முக்கியத்துவம் தந்து வெளியாகின்றன. அவை மக்களை ஒருபோதும் சென்றடையாது என்று கூறியிருந்தார்.
 
தபாங், சிங்கம் படங்கள் மக்களின் ஆதரவுடன் பாக்ஸ் ஆபிஸை கலக்கியவை. அப் தக் சப்பான் இரண்டாம் பாகமோ, வெளியான முதல்நாளே, இந்தியின் மிக மோசமான சீக்வெல் என்ற பெயரை பெற்றுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil