Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறந்த நாளில் சூப்பர் பரிசு! அம்மாவாகும் கங்கனா ரணாவத்!

Webdunia
சனி, 23 மார்ச் 2019 (11:02 IST)
தலைவி பயோகிராபி படத்தில்  ஜெயலலிதா வேடத்தில்  நடிகை கங்கனா ரணாவத் நடிக்க உள்ளார். 
 

 
கிரீடம் ,மதராசப்பட்டினம் , தலைவா உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் விஜய்யின் அடுத்த படம் தலைவி. இந்த படம் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது.  இப்படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கங்கனா ரணாவத் அண்மையில் நடித்த மணிகர்ணிகா படம் பெரிய அளவில்  வரவேற்பை பெற்றது. ராணி லட்சுமி பாய் வேடத்தில் அவர் துணிச்சலான    நடித்திருந்தார். இதையடுத்து இப்போது ஜெயலலிதாவின் பயோகிராபி படத்தில் இப்போது ஒப்பந்தமாகியுள்ளார். ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார்.  ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், தெலுங்கு , ஹிந்தியில் இப்படம் ஒரே நேரத்தில் தயாராகிறது. 
 
பாகுபலி மற்றும் மணிகர்ணிகா படங்களுக்கு திரைக்கதை எழுதிய விஜயேந்திர பிரசாத் இந்த படத்திற்கு திரைக்கதை எழுத இருக்கிறார் . திரைக்கதை எழுத்தாளார் விஜயேந்திர பிரசாத் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜ மௌலியின் தந்தை ஆவார்.
 
வைப்ரி மீடியா சார்பில் விஷ்ணு இந்தூரி இந்த படத்தை தயாரிக்கிறார்.
 
இன்று நடிகை கங்கனா ரணாவத்தின் பிறந்த நாளாகும் . அவரது பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பினை படக்குழு வெளியிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸில் ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிளாமர் உடையில் ஹோம்லி நாயகி பிரியங்கா மோகன்… கார்ஜியஸ் புகைப்படத் தொகுப்பு!

பெல்ஜியம் கார் ரேஸ் பயிற்சியின் போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்!

’ரெட்ரோ’ 1000 கோடி ரூபாய் வசூல் செய்யும்: மீண்டும் லூஸ் டாக் விடும் சூர்யாவின் ரசிகர்கள்..!

தமிழ்நாட்டில் இத்தனை திரைகளில் ரிலீஸ் ஆகிறதா சூர்யாவின் ‘ரெட்ரோ’?

அடுத்த கட்டுரையில்
Show comments