Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்ரீதேவியாகும் சன்னி லியோன்

ஸ்ரீதேவியாகும் சன்னி லியோன்
, வியாழன், 5 மார்ச் 2015 (14:54 IST)
ஸ்ரீதேவியின் ரசிகர்களுக்கு இந்த செய்தி எரிச்சலாகதான் இருக்கும். 
 
நடிகைகளில் ஸ்ரீதேவிக்குதான் ஒருகாலத்தில் அதிக ரசிகர்கள் இருந்தார்கள். அமிதாப்பச்சனின் வீட்டுமுன் அதிகாலையிலேயே ரசிகர்கள் காத்திருப்பது போல், ஸ்ரீதேவியை காணவும் ரசிகர்கள் காத்திருப்பார்கள்.
ஸ்ரீதேவிக்குப் பிறகு அப்படியொரு ரசிகர் கூட்டம் மாதுரி தீட்சித்திற்கு ஓரளவு கிடைத்தது. அதன் பிறகு...?
 
இந்த கேள்விக்குறிக்கு ஆச்சரியக்குறியாக வந்திருக்கிறார் சன்னி லியோன். ஜிஸம் 2 படத்தில் அறிமுகமான சன்னி லியோன் முன்னாள் நீலப்பட நடிகை. தனி இணையம் ஆரம்பித்து இப்போதும் தனது ட்ரிபிள் எக்ஸ் வீடியோக்களை விற்று லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். இவரை முழுமையாக வீடியோவில் தரிசித்தவர்களுக்கு நேரில் பார்க்க வேண்டும் என்று கட்டுக்கடங்காத ஆசை.
 
சன்னி லியோனைப் பார்ப்பதற்காக அதிகாலையிலேயே காத்திருக்கிறார்கள் இந்த முன்னாள் நீலப்பட நடிகையின் ரசிகர்கள். இதுபற்றி பெருமையாக சன்னி லியோனும் ட்விட்டரில் குறிப்பிட்டிருக்கிறார். ப்ரியா ராய் இந்திப் படத்தில் நடிக்கும்வரை சன்னி லியோனின் மயக்கம் குறையப் போவதில்லை.
 
(ப்ரியா ராய் குறித்து அறியாதவர்கள் கூகுளில் தேடிப் பார்த்துக் கொள்ளவும்)

Share this Story:

Follow Webdunia tamil