Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்ரீராம் ராகவனின் படத்தில் தீபிகா படுகோன்...?

ஸ்ரீராம் ராகவனின் படத்தில் தீபிகா படுகோன்...?
, திங்கள், 30 நவம்பர் 2015 (16:07 IST)
திரைக்கதைக்கு பெயர் போனவர் ஸ்ரீராம் ராகவன். அதுவும் க்ரைம் த்ரில்லர் என்றால் மனிதருக்கு அல்வா சாப்பிடுவது போல.


 

 
ஸ்ரீராம் ராகவனின் கடைசிப் படம், பட்லாபூர். நவாசுதீன், ராதிகா ஆப்தே உள்பட பலர் நடித்தது. ஒரு க்ரைம் த்ரில்லருக்கு கிளாஸிக்கல் சாயம் பூச முடியும் என்பதை நிரூபித்த படம்.
 
ஸ்ரீராம் ராகவன் தனது புதிய ஸ்கிரிப்டை முடிக்கும் தருவாயில் உள்ளார். இதில் பிரதான வேடத்தில் நடிக்க அவர் அணுகியிருப்பது தீபிகா படுகோனை.
 
இது குறத்து தீபிகாவிடம் கேட்டதற்கு. ஸ்ரீராம் ராகவன் ஸ்கிரிப்டை முடித்த பின் படித்துப் பார்த்து, தனது முடிவை தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil