Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரீதேவி கொல்லப்பட்டாரா?: முன்னாள் காவல் ஆணையர் சந்தேகம்

Webdunia
வெள்ளி, 18 மே 2018 (13:53 IST)
நடிகை ஸ்ரீதேவி கடந்த பிப்ரவரி மாதம் துபாயில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. குளியல் தொட்டியில் அவர் இறந்ததால் இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலரும் தெரிவித்து வந்தனர். துபாய் போலீஸார் தீவிர விசாரணைக்கு பின்னரே உடலை ஒப்படைத்தனர். இதனால் அவரது மரணம் கொலையாக இருக்கலாம் என ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தது.
 
ஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இயக்குநர் சுனில் சிங் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
 
இந்நிலையில் நேற்று முன்தினம் வேத் பூ‌ஷன் என்ற முன்னாள் காவல் ஆணையர் ஸ்ரீதேவி மரணம் குறித்து ஒரு தகவல் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் “ துபாயில் ஸ்ரீதேவி மரணமடைந்த ஹோட்டல் அறையை பார்வையிட சென்றிருந்தேன். ஆனால் அந்த அறைக்குள் என்னை அனுமதிக்கவில்லை. அதனால் அந்த அறைக்கு அருகில் உள்ள அறையில் தங்கி என்ன நடந்திருக்கும் என்று விசாரித்தோம். அவர் மரணத்தில் மர்மம் உள்ளது. எதையோ மறைக்கிறார்கள். 
 
இது திட்டமிட்ட கொலை என்று தெளிவாக தெரிகிறது. ஒருவரை குளியல் தொட்டியில் வலுக்கட்டாயமாக இறக்கி அவரது மூச்சு நிற்கும் வரை அழுத்திப் பிடிக்கலாம். அவ்வாறு செய்தால் குற்றம் சாட்டுவதற்கு தடயமே இல்லாமல் போய்விடும். அந்த மரணம் இயற்கையாக நடந்தது போன்று காண்பிக்கலாம் என்று தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ டிரைலரே இப்போதே தயார் செய்த சுந்தர் சி..!

ரிலீசுக்கு 5 மாதங்கள் இருக்கும்போதே கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்ட ‘ஜனநாயகன்’ விநியோகிஸ்தர்..!

ஷங்கர் அடுத்த படத்தில் ரஜினி, கமல் நடிக்கிறார்களா? வழக்கம்போல் வதந்தியை பரப்பும் யூடியூபர்கள்..!

நாங்கள் சில ஆண்டுகளாகவே கணவன் - மனைவியாக வாழ்ந்து வருகிறோம்: மாதம்பட்டி ரங்கராஜின் ஆடை வடிவமைப்பாளர் ஜாய்..!

ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக மோசடி.. நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments