Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியில் ஒரு அபூர்வ சகோதரர்கள்- ஷாருக் கானின் ஸீரோ டிரைலர்

Webdunia
வெள்ளி, 2 நவம்பர் 2018 (17:38 IST)
ஷாருக் கானின் வித்யாசமான நடிப்பில் உருவாகி உள்ள ஸீரோ படத்தின் டிரைலர் ஷாருக் கானின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது.

தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமல்ஹாசன் சாதாரன தோற்றத்தில் உள்ள ராஜாவாகவும் குள்ளமான தோற்றத்தில் உள்ள அப்புவாகவும் இருவேறு தோற்றங்களில்  நடித்து அசத்தியிருப்பார். அதில் அவர் குள்ள கமலாக நடித்து 30 ஆண்டுகளாக ஆகிவிட்டாலும் இன்னமும் அந்த கதாபாத்திரத்தின் மீதான கவர்ச்சி குறையவில்லை.

தற்போது அதேப் போன்ற ஒரு குள்ளமனிதன்  கதாபாத்திரத்தில் இந்தி நடிகர் ஷாருக் கான் நடித்துள்ள ஸீரோ படம் வரும் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விடுமுறையின் போது வெளியாக உள்ளது. 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தில் அனுஷ்கா ஷர்மா, காட்சினா கைஃப் இருவரும் ஷாருக் கானுக்கு ஜோடியாக நடித்துள்ளனர்.  ஆனந்த எல் ராய் இயக்கியிருக்கும் இப்படத்தை ஷா ருக் கானின் மனைவி கௌரி கான் தயாரித்துள்ளார். இசை சாய்ராட் புகழ் அஜய் -அதுல்

இந்தப் படத்தில் ஷாருக் கானுக்காக சல்மான் கான், கஜோல், தீபிகா படுகோனே, ராணி முகர்ஜி, மறைந்த ஸ்ரீதேவி, அலியா பட், கரிஷ்மா கபூர், ஜுஹி சாவ்லா, மாதவன் ஆகியோர் சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ளனர். சமீப காலமாக தொடர்ந்து தோல்வி படங்களையே கொடுத்து வரும் ஷாருக் கான் இந்த படத்தை எப்படியாவது வெற்றிப் படமாக்க வேண்டும் என்பதில் முழுமூச்சாக இறங்கியுள்ளார்.

ஒரு குள்ள மனிதன் (ஷாருக்), ஒரு நரம்பு முடக்க நோயால் பாதிக்க்ப்பட்ட பெண் (அனுஷ்கா ஷர்மா), ஒரு மிகப்பெரிய சினிமா நட்சத்திரம் (காட்ரினா கைப்) இவர்களுக்கிடையில் நடக்கும் முக்கோணக் காதல் கதையே ஸீரோ. நகைச்சுவை கலந்த உணர்வுப்பூர்வமான காதல் கதையாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் டிரைலர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

வருண் தவானை மன்னித்த பூஜா ஹெக்டே.. நடுவானில் விமானத்தில் நடந்தது என்ன?

இன்னும் 75 நாட்களில் ரிலீஸ்.. ‘தக்லைஃப்’ சூப்பர் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்..!

வெண்ணிற உடையில் செல்லப் பிராணியுடன் கொஞ்சி குலாவும் யாஷிகா ஆனந்த்!

திவ்யா துரைசாமியின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்