Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கப்பார் இஸ் பேக் படத்துடன் வெளியாகும் சல்மான் பட ட்ரெய்லர்

கப்பார் இஸ் பேக் படத்துடன் வெளியாகும் சல்மான் பட ட்ரெய்லர்
, சனி, 11 ஏப்ரல் 2015 (16:00 IST)
அக்ஷய் குமார் நடிப்பில் அடுத்து வெளியாகும் படம், கப்பார் இஸ் பேக். முருகதாஸ் எழுதி இயக்கிய ரமணா படத்தின் இந்தித் தழுவல். தெலுங்கு இயக்குனர் (தமிழில் வானம் படத்தை இயக்கியவர்) க்ரிஷ் படத்தை இயக்கியுள்ளார்.
 
கரீனா கபூர், ஸ்ருதி நடித்துள்ள இந்தப் படம் மே 1 வெளியாகிறது. அக்ஷய்யின் முந்தையப் படம், பேபி அனைவராலும் பாராட்டப்பட்டாலும் 100 கோடி கிளப்பில் சேரவே திக்கித்திணறியது. அதுவொரு த்ரில்லர் என்பதால் பேமிலி ஆடியன்ஸை படம் கவரவில்லை.
 
கப்பார் இஸ் பேக் அப்படியில்லை. அதனால் படம் 150 கோடிகளை தாண்டும் என்ற நம்பிக்கை உள்ளது.
 
இந்தப் படத்துடன் சல்மான் கான் நடித்துள்ள பஜ்ரங்கி பைஜான் படத்தின் ட்ரெய்லரை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil