Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அது என் போட்டோவே இல்ல.. பல்டி அடித்த ரன்வீர்சிங்! – நிர்வாண போட்டோ சர்ச்சை!

Webdunia
வியாழன், 15 செப்டம்பர் 2022 (18:45 IST)
சமீபத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நிர்வாணமாக அளித்த போஸ் சர்ச்சைக்குள்ளான நிலையில் அதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.

இந்தியில் பிரபலமான நடிகராக அறியப்படுபவர் ரன்வீர்சிங். நடிகை தீபிகா படுகோனின் கணவரான இவர் கடந்த சில நாட்கள் முன்னதாக நிர்வாணமாக நடத்திய போட்டோஷூட் தேசிய அளவில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பலரும் அவர் ஆடையின்றி போஸ் கொடுத்ததை விமர்சித்து வந்தனர்.

இதுதொடர்பாக ரன்வீர் சிங் மீது பல பகுதிகளில் இருந்தும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரன்வீர் சிங்கிடம் தற்போது மும்பை போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது அந்த நிர்வாண போட்டோஷூட் குறித்து விளக்கமளித்த ரன்வீர்சிங், தான் நிர்வாணமாக போஸ் கொடுக்கவில்லை என்றும், தனது புகைப்படங்கள் அனைத்தும் மார்பிங் செய்யப்பட்டவை என்றும் கூறியுள்ளார்.

தான் அவ்வாறாக போஸ் கொடுக்கவேயில்லை என ரன்வீர் சிங் தற்போது பல்டி அடித்து பேசியுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கங்குவா’ தோல்விக்கு பின் மீண்டெழுந்த சூர்யா.. ‘கருப்பு’ பிசினஸ் அமோகம்..!

’வாடிவாசலை அடுத்து சிம்பு - வெற்றிமாறன் படமும் டிராப்பா? கோலிவுட்டில் பரபரப்பு..!

ஹோம்லி க்யூன் பிரியங்கா மோகனின் அசத்தல் புகைப்படத் தொகுப்பு!

அழகியே… சிவப்பு நிற உடையில் கலர்ஃபுல் போஸ் கொடுத்த மிருனாள் தாக்கூர்!

மீண்டும் லோகேஷ் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படும் ரஜினிகாந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments