Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல பாலிவுட் ஜோடி புறாக்களின் திருமண தேதி அறிவிப்பு

Webdunia
திங்கள், 22 அக்டோபர் 2018 (10:37 IST)
பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே மற்றும் நடிகர் ரன்வீர் சிங்கின்  திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றை மைய்யமாக கொண்டு எடுக்கப்பட்ட "பத்மாவத்" படத்தில் ராணியாக நடித்த பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே அதே படத்தில் தன்னுடன் நடித்த ரன்வீர் சிங்கை காதலிப்பதாக மும்பை திரையுலக வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது. பிறகு அவர்கள் இருவரும் அதை உறுதி செய்தனர். 
 
இந்நிலையில், பல மாதங்களாக காதல் ஜோடியாக உலா வந்த, தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங்கின் திருமணம் வரும் நவம்பர் மாதத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ட்விட்டரில் அவர்களது திருமண அழைப்பிதழ் வெளியாகி இருக்கிறது.
 
அதில், ‘எங்கள் குடும்பாத்தாரின் ஆசிகளுடன் எங்கள் திருமணம் நவம்பர் 14,15 தேதிகளில் நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.  இத்தனை காலமாக எங்கள்மீது நீங்கள் தொடர்ந்து காட்டிவரும் அன்புக்கு நன்றி தெரிவிப்பதுடன், இந்த வாழ்க்கை தொடங்கப்போகும் எங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்’ என தீபிகா படுகோனே குறிப்பிட்டுள்ளார்.
 
இருப்பினும் திருமணம் எந்த இடத்தில் நடைபெறும் என்பதை குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கடைசி நேரத்தில் 8 நிமிடங்கள் காட்சி நீக்கப்பட்டது: ‘விடுதலை 2’ குறித்து வெற்றிமாறன்..!

கிறிஸ்டோஃபர் நோலனுக்கு சர் பட்டம் வழங்கி கௌரவித்த பிரிட்டன் மன்னர்!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

க்யூட் போஸில் கலக்கும் ‘பாபநாசம்’ புகழ் எஸ்தர்!

இந்தியன் 3 ஓடிடியில் ரிலீஸ் ஆகுமா?... இயக்குனர் ஷங்கர் பதில்!

அடுத்த கட்டுரையில்