Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெள்ள பாதிப்பின் காரணமாக ஈட்டி, ரஜினி முருகன் ரிலீஸ் ஒத்திவைப்பு

வெள்ள பாதிப்பின் காரணமாக ஈட்டி, ரஜினி முருகன் ரிலீஸ் ஒத்திவைப்பு
, வெள்ளி, 4 டிசம்பர் 2015 (13:40 IST)
தொடர்ந்து பெய்து வந்த அடைமழை காரணமாக ரஜினி முருகன், ஈட்டி ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது.


 

 
சென்னையில் விடாமல் கொட்டிவரும் அடைமழையால் நகரமே வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. பல பள்ளிகளிலும், தியேட்டர்களிலும் பொதுமக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். இதனால் டிசம்பர் 4ம் தேதி வெள்ளிக்கிழமை ரிலீஸ் செய்யப்பட இருந்தது. ரஜினி முருகன் படத்தில் சிவகார்த்திக்கேயன் நடித்துள்ளார். ஈட்டி படத்தில் அதர்வா நடித்துள்ளார். 
 
இந்நிலையில், இவ்விரு படங்களும் இன்று திரைக்கு வர இருந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னையில் பெய்த பேய் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால் மக்கள் மொட்டை மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். 
 
இதனால் இப்படங்கள் எப்பொழுது ரிலீஸ் என்பது தெரியாத நிலையில் உள்ளது.
 
நிலைமை சீரானதும் அடுத்த வாரம் எதிபார்க்கலாம்?

Share this Story:

Follow Webdunia tamil