Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போட்டியே இல்லாமல் வெளியாகும் பிரபுதேவாவின் ஆக்ஷன் ஜாக்சன்

போட்டியே இல்லாமல் வெளியாகும் பிரபுதேவாவின் ஆக்ஷன் ஜாக்சன்
, சனி, 4 அக்டோபர் 2014 (14:55 IST)
பிரபுதேவாவின் முதலிரு இந்திப் படங்கள் - வான்டட், ரவுடி ரத்தோர் - சூப்பர்ஹிட். மூன்றாவது வெளியான ரா...ராஜ்குமார் பாக்ஸ் ஆபிஸில் சோபிக்கவில்லை. 
 
இதற்கென்றே காத்திருந்த இந்தி மீடியாக்கள் படத்தையும், பிரபுதேவாவையும் கழுவி ஊற்றின. இதிலிருந்தே பிரபுதேவாவின் அடுத்தப் படமான ஆக்ஷன் ஜாக்சன் வெற்றி பெற்றhக வேண்டிய நிலையில் இருப்பதை உணரலாம். அதற்கு இருந்த ஒரே தடையும் இப்போது விலகிவிட்டது.
டிசம்பர் 5 ஆக்ஷன் ஜாக்சன் வெளியாகிறது. அதேநாள் பழம்பெரும் நடிகர் ரிஷி கபூர், அபிஷேக் பச்சன் அப்பா மகனாக நடித்துள்ள ஆல் இஸ் வெல் படமும் வெளியாவதாக இருந்தது. இந்நிலையில் அபிஷேக்கின் அம்மாவாக நடித்துவரும் ஸ்மிருதி இரானியின் கால்ஷீட் கிடைக்காததால் படப்பிடிப்பு தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

டிசம்பர் 5 படத்தை வெளியிடுவது சாத்தியமில்லை என தயாரிப்பாளர் தரப்பு கூறியுள்ளது. ஆக, இருந்த ஒரு போட்டியும் விலக, ஆளில்லாத கிரவுண்டில் சிக்ஸர் அடிக்கும் வாய்ப்பு ஆக்ஷன் ஜாக்சனுக்கு கிடைத்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil