Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்து நேரடி இந்திப் படம்தான்

Webdunia
செவ்வாய், 27 மே 2014 (16:15 IST)
இந்தி திரையுலகம் ஜுன் 6-ம் தேதியை ஆவலுடன் எதிர்நோக்குகிறது. அன்று அக்ஷய் குமார் நடித்த ஹாலிடே - ஏ சோல்ட்ஜர் நெவர் ஆஃப் டூட்டி படம் வெளியாகிறது. தமிழில் வெற்றி பெற்ற துப்பாக்கியின் ரீமேக்தான் இந்தப் படம். முருகதாஸே படத்தை இயக்கியிருக்கிறார்.
முருகதாஸின் முதல் இந்திப் படம் கஜினி இந்திய சினிமா சரித்திரத்தில் 100 கோடி வசூலை தொட்ட முதல் படம் என்ற சாதனையை படைத்தது. அன்றிலிருந்து முருகதாஸின் இயக்கத்தில் நடிக்க இந்தியின் முன்னணி நட்சத்திரங்கள் ஆவல் கொண்டு அலைகிறார்கள். முருகதாஸின் இரண்டாவது இந்திப் படம் ஹாலிடேயும் தமிழ் படத்தின் ரீமேக்தான்.
 
நேரடி இந்திப் படங்களை இயக்க மாட்டீர்களா என்று கேட்டதற்கு, எனக்கும் நேரடி இந்திப் படத்தை இயக்க ஆசைதான். துப்பாக்கி படமே இந்திக்காக எழுதிய கதைதான். ஆனால் நேரம் சரியாக அமையாததால் தமிழில் முதலில் எடுக்க வேண்டியதாகிவிட்டது. என்னுடைய அடுத்தப் படம் நேரடி இந்திப் படமாக இருக்கும் என கூறினார்.
 
தற்போது விஜய் நடிக்கும் கத்தி படத்தை இயக்கி வருகிறார் முருகதாஸ். அதையடுத்து சூர்யா நடிக்கும் படத்தை இயக்குகிறார்.

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை இயக்கும் முருகதாஸ்… பேன் இந்தியா நடிகரோடு கூட்டணி!

கூலி ஷூட்டிங்குக்கு தேதி குறித்து கொடுத்த ரஜினி… செண்ட்டிமெண்ட்தான் காரணமா?

லிங்குசாமி மேல் அதிருப்தியில் கமல்ஹாசன்… காரணம் இதுதானா?

கதைகட்டுவது இதயத்தை நோகச்செய்கிறது… விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு சைந்தவி விளக்கம்!

Show comments