Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என் மகளை நடிக்க வைக்க மாட்டேன்... சொல்வது யார் தெரியுமா?

என் மகளை நடிக்க வைக்க மாட்டேன்... சொல்வது யார் தெரியுமா?
, சனி, 12 நவம்பர் 2016 (10:49 IST)
திரையுலகினர் தங்கள் மகன்களை நடிகர்களாக்குவதில் காட்டும் தீவிரத்தில் பத்தில் ஒருபங்கைக்கூட தங்கள் மகள்களை நடிகையாக்குவதில் காட்டுவதில்லை. சினிமாவில் நடிகைகளுக்கு ஏற்படும் சிரமங்கள் அவர்களுக்கு தெரியும்.

 
நடிகர் ஷாகித் கபூருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை எழுந்து நடக்கும் முன்பே, அவரிடம், உங்கள் மகள் நாளை நடிகையாவது என்று முடிவு செய்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்கப்பட்டது.
 
இந்தி சினிமாவில் பல நடிகைகளை காதலித்து நடிகையல்லாதவரை திருமணம் செய்தவர் ஷாகித். அவர் என்ன சொல்வார்? 
 
என் மகள் அப்படியொரு முடிவு எடுத்தால் அதற்கு சம்மதிக்க மாட்டேன்.
 
அதானே பார்த்தோம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ் சினிமாவில் முத்த காட்சிகள் இப்படிதான் (வீடியோ)